“எங்களுக்கு இந்தி தெரியும் போடா”… டி- சர்ட் அரசியலில் பொன். ராதா கிருஷ்ணன்

 

“எங்களுக்கு இந்தி தெரியும் போடா”… டி- சர்ட் அரசியலில் பொன். ராதா கிருஷ்ணன்

நீ என்ன சொல்லி தருவது ” எங்களுக்கு தெரியும் போடா” என்று நூற்றுக்கணக்கான இளைஞர் இன்று பேச ஆரம்பித்து விட்டார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மும்மொழி திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அண்மையில் சென்னை விமான நிலையத்தில், திமுக எம்.பி. கனிமொழி இந்தி தெரியாது என்று சொன்னதால், நீங்கள் இந்தியர்தானே சி.ஐ,எஸ்.எப். அதிகாரி கேட்டதால், இந்தியர் என்றால் எல்லோருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டுமா என்ற சர்ச்சை எழுந்தது. இந்தி திணிப்பிற்கு எதிராக அவர் பற்ற வைத்த நெருப்பு இன்னமும் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இதேபோல் டெல்லி விமான நிலையத்தில், இமிகிரேஷன் பிரிவில் இருந்தவர், இயக்குநர் வெற்றிமாறனிடம் இந்தியில் பேச, இவர் தனக்கு இந்தி தெரியாது என்று சொன்னதால் தீவிரவாதி என அவரை அவமானப்பத்திய சம்பவம் தமிழர்களை கொதிக்க வைத்தது. கடந்த சில தினங்களாக திரையுலகினர் பலரும் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘’இந்தி வேணாம் போடா’’ என்ற டீ சர்ட் அணிந்தது இணையவழி பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனால் ‘’இந்தி வேணாம் போடா’’என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

“எங்களுக்கு இந்தி தெரியும் போடா”… டி- சர்ட் அரசியலில் பொன். ராதா கிருஷ்ணன்

இந்நிலையில் திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “கடந்த 65 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் இந்தி மொழியை ஒழித்துவிட்டோம் என்று கூறுகிறார்கள் . ஒழித்தது இந்தி மொழியை மட்டும்தானா? அல்லது தமிழையும் சேர்த்து ஒழித்திருக்கிறார்களா? இரண்டு மொழியையும் அழித்து இரட்டை கொலையை செய்திருக்கிறார்கள். முறைப்படி ஒரு அரசாங்கம் தன் குடிமக்களுக்கு தமிழை சரியான முறையில் பயிற்றிருந்தார்கள் என்று சொன்னால் இன்றைய மாணவர்கள் தமிழிலே உறுதியாக நின்றிருப்பார்கள். இந்தி மட்டும் அல்ல எந்த மொழிகளாலும் எந்த கொம்பனாலும் தமிழை அசைக்க முடியாது என்ற நிலையை தமிழன் உணர்ந்து கொண்டிருப்பான். இவ்வளவு கேவலமான முறையில் தமிழனை தள்ளியது கடந்த 60 ஆண்டு கால ஆட்சி முறை தான். நீ என்ன சொல்லி தருவது ” எங்களுக்கு தெரியும் போடா” என்று நூற்றுக்கணக்கான இளைஞர் இன்று பேச ஆரம்பித்து விட்டார்கள்” என ஆவேசமாக கூறினார்.