‘பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி தான் தமிழகத்தில் இனி’.. என்ன சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்!

‘பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி தான் தமிழகத்தில் இனி’.. என்ன சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வருவதால், பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டன. இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்க உள்ளன. அதே போல வரும் டிசம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாக உள்ளது. இவ்வாறு தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திமுகவில் இருந்து பிரமுகர்கள் வெளியே செல்வதை தவிர வேறு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதிமுகவிலோ புதிது புதிதாக சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. தற்போது அதிமுக அமைச்சர்களிடையே பிளவை ஏற்படுத்தும் விதமாக அடுத்த தலைநகர் எது? என்ற பிரச்னை எழுந்துள்ளது.

‘பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி தான் தமிழகத்தில் இனி’.. என்ன சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்!

சமீபத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கு அதிமுக தலைமை முற்றுப்புள்ளி வைத்ததை போல இதற்கும் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

‘பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி தான் தமிழகத்தில் இனி’.. என்ன சொல்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்!

அப்போது பேசிய அவர், பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சி தான் தமிழகத்தில் இனி நடக்கும் என்றும் மதுரையை 2வது தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூறினார். வரும் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தான் வெற்றி பெரும் என ராதாகிருஷ்ணன் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.