மாசு கட்டுப்படு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை- ரூ.15 லட்சம் பறிமுதல்

 

மாசு கட்டுப்படு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை- ரூ.15 லட்சம் பறிமுதல்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீடு மற்றும் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று சோதனை நடத்தினர். மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவராவர்.

மாசு கட்டுப்படு வாரிய தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை- ரூ.15 லட்சம் பறிமுதல்

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் கடந்த ஏப்ரல் மாதம் ஒரே மாதத்தில் 59 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அவர் பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன் அவசர அவசரமாக 52 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுவரை ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 20 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துவந்த நிலையில் ஆட்சி மாற்றத்துக்கு முந்தைய மாதம் 52 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி வெங்கடாசலம் முறைக்கேட்டில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அவசரக் கூட்டம் நடத்தி வெங்கடாசலம் ஒப்புதல் வழங்கியதன் பின்னணியில் பெரும் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது. அந்த லஞ்ச பணத்தில் வருமானத்துக்கு அதிகமாக வெங்கடாசலம் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.