மேற்கு வங்கத்தில் 79.79 சதவீதம்.. அசாமில் 72.14 சதவீதம்.. முதல் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..

மேற்கு வங்கத்தில் 79.79 சதவீதம்.. அசாமில் 72.14 சதவீதம்.. முதல் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..

மேற்கு வங்கம் மற்றும் அசாமில் நேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் முறையே 79.79 சதவீதம் மற்றும் 72.14 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை கடந்த மாதம் 27ம் தேதியன்று தேர்தல் தேதியை அறிவித்தது. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகியவற்றுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவித்தது. அதேசமயம் அசாமுக்கு 3 கட்டமாகவும், மேற்கு வங்கத்துக்கு 8 கட்டமாகவும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் 79.79 சதவீதம்.. அசாமில் 72.14 சதவீதம்.. முதல் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..
அசாமில் வாக்களிக்க வந்த பெண் வாக்காளர்கள்

அதன்படி, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அசாமில் முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் 47 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 81.09 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் தேர்தல் நடைபெற்றது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து சென்றனர். அசாம் முதல் கட்ட தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவானது தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் 79.79 சதவீதம்.. அசாமில் 72.14 சதவீதம்.. முதல் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..
மேற்கு வங்கத்தில் ஆர்வமாக வாக்களிக்க வந்த வாக்காளர்கள்

மேற்கு வங்கத்தில் நேற்று முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் மொத்தம் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 73 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது தேர்தல் கடமையை நிறைவேற்ற தகுதி பெற்று இருந்தனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 191 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேற்கு வங்க முதல் கட்ட தேர்தலில் 79.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் .