Home தமிழகம் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : மேலும் ஒரு பெண் வாக்குமூலம்!

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : மேலும் ஒரு பெண் வாக்குமூலம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கோவை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய வழக்குகளுள் ஒன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்த இந்த சம்பவம், தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை கையிலெடுத்த சிபிஐ அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பாலியல் வன்கொடுமை

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்படாமல் காப்பாற்றப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. அதற்கு செவி சாய்த்த சிபிஐ அதிகாரிகள், அதிமுக பிரமுகர் அருளானந்தம், ஹேரேன் பால் மற்றும் பைக் பாபு ஆகிய 3 பேரை கைது செய்தனர். பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளராக இருந்த அருளானந்தம், இச்சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது அம்பலமானதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இவர்களை தொடர்ந்து மேலும் சிலரை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்த நிலையில், கைது நடவடிக்கை தொடரும் என சிபிஐ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அருளானந்தம், ஹெரன்பால், மைக் பாபு

இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு கல்லூரி மாணவி, கடந்த டிசம்பர் மாதம் ஆசிரியை ஒருவர் உட்பட 3 பேர் புகார் அளித்திருந்தனர். இதுவரை 5 பெண்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

தேர்தலுக்காக சிறுபான்மையினரின் நண்பர்களைப் போல நடிப்பவர்கள் நாங்கள் அல்ல- ஸ்டாலின்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – திமுக உறவு என்பது தேர்தல்கால உறவல்ல, நீண்டகாலமாக இருந்து வரும் கொள்கை உறவு என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம்… விரக்தியில் ராணுவ வீரர் தற்கொலை…

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் அருகே காதல் தோல்வியால் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம்...

சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும்- ஸ்டாலின் சபதம்

சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என திமுக தலைவர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை மாதவரத்தில் நடைபெற்ற உங்கள்...
TopTamilNews