பொள்ளாச்சி அதிமுக பிரமுகர் அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம்!

 

பொள்ளாச்சி அதிமுக பிரமுகர்  அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அதிமுக பிரமுகர்  அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம்!

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் 2 அண்டுக்ளுக்கு பிறகு மேலும் மூவர் கைதாகியுள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய அந்த பாலியல் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 5 பேர் கைதாகி
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சூழலில் கைதான அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், மைக் பாபு ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரையும் போலீசார் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி அதிமுக பிரமுகர்  அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம்!

இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடு களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால், பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் நீக்கப்படுகிறார். கட்சி தொண்டர்கள் யாரும் அவருடன் எந்தவித தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.