ஜெயிலுக்கு செல்லும் வரை ஓயப்போவதில்லை...இபிஎஸ்க்கு எதிராக கொந்தளிப்பு

 
e

 சென்னை மழை வெள்ளத்துக்கு காரணம் அதிமுக தான் என்று திமுகவும்,  திமுக தான் காரணம் என்று அதிமுகவும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில்,   சென்னை மழை நீர் வெள்ளத்திற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று தனி நிபுணர் குழுவை அமைத்து இருக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.

 இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி,   சென்னை வெள்ளத்திற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.   அவர்,  சென்னை வெள்ள பாதிப்பு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம்.  இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஜெயிலுக்கு செல்லும் வரை ஓயப்போவதில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

பொய்யிலே  பிறந்து பொய்யிலே வளர்ந்த கோயபல்ஸ்-ஐ மிஞ்சக் கூடியவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார்.  தேர்தல் பிரச்சாரத்தின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மிக அருமையாக செய்திருக்கிறோம்.  945 கிலோமீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் திட்டத்தை செய்து சாதனை படைத்திருக்கிறோம்.  சென்னையில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்கி நிற்காது .  எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காது என்று தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

pu

 உண்மையிலேயே அப்படி அவர்கள் செய்திருந்தால் சென்னை இப்படி வெள்ளக் காடாக மாறி இருக்காது.  தொடர் மழை பெய்தாலும் சரி புயல் வந்தாலும் சரி எந்த மாற்றம் ஏற்பட்டாலும் சென்னையில் தண்ணீர் தேங்காது எனக்கூறினார்.   இந்த பொய்யை தமிழகம் முழுவதும் கூறி வாக்கு சேகரித்தார்.  

 இதைவிட ஒருபடி மேலே சென்ற அமைச்சர் எஸ். பி. வேலுமணி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டாலும் வெள்ள பாதிப்பு ஏற்படாது என்று சொன்னார்.  அந்த அளவுக்கு உள்கட்டமைப்பை செய்து இருக்கிறோம் என்று கூறினார்.   ஆனால் அவர்களிடம் நான் கேட்கிறேன்... சென்னை மக்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தார்கள் மழை அதிகமாக பெய்தால் எப்படிப்பட்ட சூழ்நிலைக்கு சென்னை தள்ளப்படும் என்பதை இவர்கள் காட்டிவிட்டார்கள். 

 இதற்கெல்லாம் காரணமான எடப்பாடி பழனிச்சாமி,  சென்னை மக்களை சந்திக்க தனியாக செல்ல பயந்துகொண்டுதான்  பபூன் ஜெயக்குமார் ,  சென்னை தாதா வளர்மதி என்று நாற்பது  ஐம்பது பேரை திரட்டிக்கொண்டு கொட்டும் மழை வெள்ளத்தை பார்வையிடுகிறேன்  என்று வலம் வந்து கொண்டிருக்கிறார் .  கொஞ்சம் கூட அவருக்கு மனசாட்சி இருக்காதா?  இந்த வெள்ளப் பாதிப்புக்கு முழு காரணமான எடப்பாடி பழனிச்சாமி திமுக மீது பழி போடுகிறார்.   கடந்த 10 ஆண்டுகளாக அனைத்தையும் சுரண்டிவிட்டு இப்போது திமுக என்ன செய்தது என கேள்வி கேட்பது எடப்பாடி பழனிச்சாமி அசிங்கமாக இல்லையா? என்று கடுமையாக விளாசி இருக்கிறார்.