ராமதாசை கண்டிக்காத அன்புமணி சூர்யாவை மட்டும் கண்டிப்பது ஏன்? கொ.ம.மு. விளாசல்

 
ர்ர்ர்

ஜெய்பீம் பட விவகாரத்தில் பாமகவின் நிலைப்பாடு குறித்து கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

 ஜெய்பீம் படத்தில் சில வினாடிகள் வரும் காட்சியில் உள்ள கலச புகைப்படத்தால் வன்னியர்கள் அவமதிக்கப்பட்டனர் என்று பாமகவினரால் சர்ச்சை எழுப்பப்பட்டது. எதிர்ப்பை தொடர்ந்து காட்சியும் மாற்றப்பட்டுவிட்டது.  அதன்பின்னர் குரு மூர்த்தி என்ற பெயர்  வன்னியர் சமூகத்தின் நபரை குறிக்கிறது என்று எதிர்ப்புக்குரல் அன்புமணியால் எழுப்பப்படுகிறது. 

அர்

 திரைப்படத்தில் வரும் காட்சிகளை அமைப்பது இயக்குனர்.   அன்புமணி இயக்குநரை கேள்வி கேட்காமல் நடிகர் சூர்யாவை மட்டும் குறிவைத்து மக்களை தூண்டி விடுவது விளம்பர சுயலாப உள்நோக்கம் கொண்ட அரசியல் தான் என்கிறார். 

 அவர் மேலும்,    வன்னியர்களை அவமதித்து விட்டனர் என்று வன்மத்தை சொல்லி வன்னியர்களை தூண்டிவிடும் அன்புமணி,  தமிழர் நிலத்தின் பன்னெடுங்கால வரலாறு கொண்ட வேளாளர் சாதிய பெயரை பள்ளர் சமூகத்திற்கு தாரைவார்க்கும் நிகழ்வு அரங்கேறியபோது,  வேளாளர் எல்லாம் ஓரணியில் திரண்டு நின்று எதிர்த்து வந்தனர்.   ஆனால் ராமதாசு வேளாளர் உணர்வை புரிந்து கொள்ளாமல் 1994 ஆம் ஆண்டு பரமக்குடியில் வேளாளர் பெயரை பலர் சமூகத்திற்கு தாரை வார்க்க வேண்டும் என்று பாமக அரசியல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர். 

 2012ஆம் ஆண்டு இதே கோரிக்கையை தமிழக அரசிடம் வலியுறுத்தி கோடிக்கணக்கான வேளாளர் சமூகத்தினரின் உள்ளங்களை காயப்படுத்தினார்.  அதன் பின்னர் அறிக்கை அறிக்கையாக வெளியிட்டு பள்ளர் தான் வேளாளர் என்று கூப்பாடு போட்டார் .  அப்போது வேளாளர் சமூகத்தின் குரல் அன்புமணி ராமதாசுக்கும் கேட்கவில்லையா?  ஒரு திரைப்படத்திற்கு இப்படி கொந்தளிக்கும் அன்புமணி ,  வேளாளர் பெயர் நிகழ்வில் தன் கட்சியும் தந்தையும் நடந்து கொண்டதை கண்டிக்காமல் கள்ள மவுனம் காத்து விட்டு,   இன்று நல்லவர் போல் வேடம்  போடுவது சரியா? இதுவா முதல்வர் ஆவதற்கான தகுதி?என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

ஆரு

 மேலும் சாதி, மத மோதலை பாமக ஆதரிக்காது என சூர்யாவுக்கு கேள்வியை எழுப்பும் அன்புமணிக்கு இந்த செயல் ஒற்றுமையினையா காட்டுகிறது.   தமிழ் சமூகத்தில் சாதி மோதலை உருவாக்கும் வகையில் செயல்படும் உண்மைக்கு மாறாக செயல்படும் பிற சமூகங்களை ஒன்றோடொன்று மோத விட்டு தான் மட்டும் முதல்வராக வேண்டும் என்று தனது அரசியலை அன்புமணி கையிலெடுக்க ஆசைப்படுகிறார்.  இது ஒருபோதும் பலனளிக்காது என்று அழுத்தமாக தெரிவித்திருக்கிறார்.

 மாபெரும் இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய பாமக ராமதாஸ் இன்று திரைப்பட காட்சிகளுக்காக திரைத்துறை நடிகர்களுக்கு எதிராக மட்டும் போராட்டம் நடத்தும் கட்சியாக சுருங்கி போனதே என்று அவர் விமர்சித்திருக்கிறார்.