சட்டப் பேரவையில் கு.க.செல்வம் எந்த கட்சி? – தி.மு.க விளக்கம் அளிக்காததால் குழப்பம்

 

சட்டப் பேரவையில் கு.க.செல்வம் எந்த கட்சி? – தி.மு.க விளக்கம் அளிக்காததால் குழப்பம்

கு.க.செல்வத்தை எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சட்டப் பேரவைச் செயலாளரிடம் தி.மு.க மனு கொடுத்திருந்தது. இதன் அடிப்படையில் கு.க.செல்வம், தி.மு.க-வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தி.மு.க இன்னும் விளக்கம் அளிக்காததால் கு.க.செல்வம் எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பதில் முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது என்று கூறப்படுகிறது.

சட்டப் பேரவையில் கு.க.செல்வம் எந்த கட்சி? – தி.மு.க விளக்கம் அளிக்காததால் குழப்பம்


தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த கு.க.செல்வம், பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து, பா.ஜ.க கமலாலயம் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தைரியம் இருந்தால் தன் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்று அவர் தி.மு.க தலைமைக்கு சவால் விடுத்திருந்த நிலையில், தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தி.மு.க தரப்பில் சட்டப்பேரவை செயலாளரிடம் கு.க.செல்வத்தின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் விளக்கம் அளிக்கும்படி கு.க.செல்வத்திடம் சட்டப்பேரவை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.அதற்கு கு.க.செல்வம், “கட்சி

சட்டப் பேரவையில் கு.க.செல்வம் எந்த கட்சி? – தி.மு.க விளக்கம் அளிக்காததால் குழப்பம்

மாறவில்லை, பா.ஜ.க-வில் இணையவில்லை” என்று அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள், பேட்டிக்கள், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட ஆதாரங்களுடன் கு.க.செல்வம் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தி.மு.க-வுக்கும் சட்டப் பேரவைச் செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தி.மு.க பதில் அளிக்கவில்லை. தி.மு.க அளிக்கும் பதில் அடிப்படையில் அவர் எந்தக் கட்சியைச் சார்ந்த உறுப்பினராக இருப்பார் என்பது முடிவு செய்யப்படும் என்று சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டப் பேரவையில் கு.க.செல்வம் எந்த கட்சி? – தி.மு.க விளக்கம் அளிக்காததால் குழப்பம்


கு.க.செல்வம் தற்போது பா.ஜ.க ஆதரவாளராக மாறிவிட்டதால் சட்டப் பேரவையில் அவருக்கு பேசுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படும். தமிழக அரசு மற்றும் மத்திய அரசை புகழ்ந்து அவர் பேசுவது தி.மு.க உறுப்பினர் என்ற வகையில் அவைக் குறிப்பில் ஏற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சட்டப் பேரவைக்குள் அவர் தி.மு.க உறுப்பினராக தொடர்வாரா, அல்லது கட்சி சாராத உறுப்பினராகத் தொடர்வாரா என்பது திங்கட்கிழமை தெரிந்துவிடும் என்கின்றனர்.