சாதிசாக்கடை... சீமானுக்கு எதிராக தேசிய அளவில் டிரெண்ட் செய்யும் விசிக

 
சே

ஜெய் பீம் விவகாரம் குறித்து அன்புமணி எழுதியுள்ள கடிதத்தின் மூலம் அவரின் வலியும் உண்மை தன்மையையும் மறுக்க முடியாது. அந்த குறியீட்டை தெரியாமல் வைத்து விட்டனர் என்பது ஏற்க இயலாது. உலகத்திற்கே தெரியும், அது வன்னியர் அடையாளம் என அடையாளத்தை நீக்கியதை முதலிலே செய்திருக்கலாம்.  அதை  தவிர்த்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்.   


மேலும்,  ஒரு சமூகத்தின் வலியை காட்ட மற்றொரு சமுகத்திற்கு வலி,வேதனை ஏற்படுத்தியிருக்க கூடாது. அந்த முத்திரை வைக்காமல் இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை.  உலகத்துக்கே தெரியும் அது வன்னிய சமூகத்தின் குறியீடு என்று.   அங்கு பாதிக்கப்பட்ட குறவர் மக்களுக்கு இருளர்‌ மக்களுக்கு பாதுக்காப்பாக இருந்தது வன்னியர்கள்தான். அவர்களுக்காக போராடியதே வன்னியர்தான்.  அதை ஏன் நீங்க தவறாக காட்டணும்? என்று கேள்வி எழுப்பியவர், 

ம்ன்

நான் ஆரம்பத்தில் இதை கவனிக்கல.  கவனிச்சிருந்தா நானே தம்பிகிட்ட சொல்லி, அதை நீக்கிவிட சொல்லி இருப்பேன்.  அதற்காக, சூர்யாவை எட்டி உதைப்பேன் என கூறியது அநாகரிகமானது.   வேண்டுமென்றால் உதைப்பேன் என பதிவிட்டவரை உதையுங்கள் நான் பணம் தருகிறேன் என்று தெரிவித்திருந்தார். 


இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னி அரசு,   திரௌபதி - ருத்ரதாண்டவம் படங்களில் தலித்துக்களை இழிவுபடுத்தும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என சொல்ல துணிச்சல் இல்லாமல் அக்னிச்சட்டிக்கு மட்டும் பொங்குவது என்ன உளவியல்? அரச பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு படைப்பை சாதிரீதியாக முடக்க துடிக்கும் பாமகவோடு நிற்பது சரியாண்ணே?என்ற கேள்வியை எழுப்பினார்.

ட்ர்

இதையடுத்து #தலித்விரோதி_சீமான்    #சாதிசாக்கடை_சீமான் என்ற ஹேஷ்டேக்குகளை டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றார்கள் விசிகவினரும், சூர்யா ரசிகர்களும்.  இதில் , #சாதிசாக்கடை_சீமான் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.