‘விசிக வெற்றியைத் தடுக்க அதிமுக மற்றும் பாஜக சதி’ திருமாவளவன் ட்வீட்!

 

‘விசிக வெற்றியைத் தடுக்க அதிமுக மற்றும் பாஜக சதி’ திருமாவளவன் ட்வீட்!

செய்யூர் சட்டமன்றத் தொகுதியின் ஈவிஎம் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள நெல்வாய் ஏசிடி கல்லூரியில் வெளியாட்கள் நடமாட்டம் குறித்து எம்.பி. திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘விசிக வெற்றியைத் தடுக்க அதிமுக மற்றும் பாஜக சதி’ திருமாவளவன் ட்வீட்!

நெல்வாய் ஏசிடி கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே wifi வசதி ஏன்? என செய்யூர் தொகுதி விசிக வேட்பாளர் பனையூர் மு.பாபு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “#செய்யூர் தொகுதியில் வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள #ஸ்ட்ராங்_ரூம் அருகில் திடீரென #WiFi ஏற்பாடு ஏன்? அதிமுக, பாஜக’வினரின் சதிவேலையா? தில்லுமுல்லு செய்யத் திட்டமா? விசிக வேட்பாளர் #பனையூர்பாபு, தற்போது தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம். தேர்தல் ஆணையமே தெளிவு செய்” என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/thirumaofficial/status/1384044128007180288

அதேபோல் தற்போது மற்றொரு பதிவில், “செய்யூர் சட்டமன்றத் தொகுதியின் ஈவிஎம் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள நெல்வாய் ஏசிடி கல்லூரியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆட்கள் நடமாட்டம். WiFi வசதி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. விசிக வெற்றியைத் தடுக்க அதிமுக மற்றும் பாஜக செய்யும் சதிமுயற்சியா? அரசே விளக்கம் தேவை. நடவடிக்கை தேவை” என்று வலியுறுத்தியுள்ளார்.