சூர்யாவுக்கு எதிராக அடுத்த அஸ்திரத்தை எடுத்த வன்னியர் சங்கம்!

 
நடிகர் சூர்யா

ஜெய்பீம் படத்தில் வன்னியர் சங்கத்தை இழிவுப்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி அதன் தலைவர் அருள்மொழி தனது வழக்கறிஞர் பாலு சார்பில் நடிகர் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில் வன்னியர் சங்கத்தின் புனித குறியீடான அக்னி குண்டத்தையும் காடுவெட்டி குருவை தவறாக சித்தரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 

ஜெய்பீம்' நிச்சயம் உங்களின் மனசாட்சியை அசைக்கும்: நடிகர் சூர்யா - தமிழ்  News - IndiaGlitz.com

இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஜெய்பீம் படத்தால் வன்னியர் சங்கமும் ஒட்டுமொத்த வன்னியர்களும் மனதளவில் புண்பட்டுள்ளனர் என்பதால் ஒரு வாரத்திற்குள் ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டது. இதற்கு பாமக மற்றும் வன்னியர் சங்கம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. பணம் பறிக்கும் பாமக என்ற ஹேஸ்டேக்கையும் டிரெண்ட் செய்தனர். 

jk

அதேபோல மத்திய, மாநில அரசுகளுக்கு ஜெய்பீம் படத்திற்கு எந்தவித விருதும் வழங்கக் கூடாது என வன்னியர் சங்கம் கடிதம் எழுதியது. இதனிடையே இயக்குநர் ஞானவேல் வருத்தம் தெரிவித்தார். இச்சூழலில் சிதம்பரம் நீதிமன்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், அமேசான் நிறுவனம் மீது அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினரிடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.