சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்!

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்!

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக்க வேண்டும் என எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வில் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஜெ. அன்பழகன் மறைவால் காலியாக உள்ள சேப்பாக்கம் தொகுதியில் இடைத்தேர்தல் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்!

கருணாநிதி மறைவுக்கு பிறகு அரசியலில் தீவிரம் காட்டி வரும் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, களப்பணி என அரசியல் களத்தில் இறங்கி பணி செய்து வருகிறார் உதயநிதி. தற்போது அவரை எம்எல்ஏ-வாக்க திட்டமிட்டுள்ள ஸ்டாலின் அதை தயாநிதி மூலம் முன்மொழிய வைத்துள்ளதாக கூறப்படுகிறது .

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்!

ஏற்கனவே கட்சிக்குள் உதயநிதி தலையீடு அதிகமாக உள்ளதாக எம்எல்ஏ குக செல்வம் வெளிப்படையாக போட்டுடைத்த நிலையில் தயாநிதியின் இந்த பேச்சு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.