எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு : டிடிவி தினகரன் ஓபன் டாக்!

 

எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு : டிடிவி தினகரன் ஓபன் டாக்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அமமுக மட்டும் எந்த பரபரப்பும் இல்லாமல் கூலாக இருக்கிறது. இதுவரையில் அமமுகவில் விருப்ப மனு விநியோகம் பெறும் பணி கூட நிறைவடையவில்லை. சசிகலா அரசியலில் இருந்து பின்வாங்கியதும் அமமுகவை வலுவிழக்கச் செய்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால், தேர்தலில் அமமுக போட்டியிடும் என திட்டவட்டமாக டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு : டிடிவி தினகரன் ஓபன் டாக்!

இந்த நிலையில், சென்னை தி.நகர் இல்லத்தில் தினகரன் சசிகலாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அம்மா ஆட்சி அமைக்கவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தோன்றியது. அமமுகவில் 8, 9 நேர்காணல் நடைபெறும். 10ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அமமுக தேர்தலில் போட்டியிடும். எங்கள் தலைமையில் கூட்டணி அமைக்கும் கட்சிகளுடன் இணைந்து களம் காணுவோம். நிச்சயம் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறுவோம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறினார்.

மேலும், சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் அதை அறிவிப்போம். அமமுக தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.