நாட்டிலேயே முதல் முறையாக… வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த எம்பிக்கு சிறை தண்டனை!

நாட்டிலேயே முதல் முறையாக… வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த எம்பிக்கு சிறை தண்டனை!

இந்தியாவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது சஜகமான பாரம்பரியமான முறை. வெற்றிபெற்றுவிடுவோம் என்ற முழு நம்பிக்கையில் இருக்கும் வேட்பாளர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இதுதொடர்பாக எண்ணற்ற வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன. ஆனால் எந்தவொரு வழக்குக்கும் இப்படியொரு தீர்ப்பு கிடைத்ததில்லை. நாட்டிலேயே முதல் முறையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் சிட்டிங் எம்பி ஒருவருக்கு ஆறு மாதங்கள சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக… வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த எம்பிக்கு சிறை தண்டனை!

2019ஆம் ஆண்டு நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றது. மகபுபாபாத் மக்களவை தொகுதியில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த கவிதா மாலோத் வேட்பாளராகக் களமிறங்கினார். வாக்கு சேகரிப்பின்போது இவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. புகாரையடுத்து கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கண்காணித்த தேர்தல் பறக்கும் படையினர், கவிதாவின் உதவியாளர் சவுகத் அலி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும்போது கையும் களவுமாகப் பிடித்தனர்.

நாட்டிலேயே முதல் முறையாக… வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த எம்பிக்கு சிறை தண்டனை!

இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனிடையே கவிதா தேர்தலில் வெற்றிபெற்றார். இத்தனைக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைக் காட்டிலும் சுமார் 1.50 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார் கவிதா. முன்னமே சொன்னதுபோல வெற்றிபெறுபவர்களைக் கூட பணம் கொடுக்க வைக்கும் தோல்வி பயம். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

நாட்டிலேயே முதல் முறையாக… வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த எம்பிக்கு சிறை தண்டனை!

ஆதாரத்துடன் சிக்கியதால் சிறப்பு நீதிமன்றம் கவிதாவையும் அவரது உதவியாளர் சவுகத் அலியையும் குற்றவாளிகளாக உறுதிசெய்தது. ஆகவே இருவருக்கும் தலா ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பணம் கொடுத்ததாக சிட்டிங் எம்பி ஒருவர் தண்டனை பெறுவது இதுவே முதல் முறை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் கவிதா மேல் முறையீடு செய்திருக்கிறார்.