’’இந்த நாள்.. உன் காலண்டரில் குறிச்சு வச்சுக்க’’-அண்ணாமலை சவால்

 
ர

அண்ணாமலை படத்தில், அசோக், இந்த நாள்.. உன் காலண்டரில்  குறிச்சு வச்சுக்க என்று சொல்லி சவால் விடுவார்.  அதே போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சவால் விடுத்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கூடைப்பந்து மகளிர் விளையாட்டு அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்ராஜுக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் அனிதாவுக்கு தமிழக பாஜக சார்பில் கார் வாங்குவதற்காக 10 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,   ‘’தமிழ்நாட்டின் நிதி அமைச்சரான பின்னர்தான்  அந்த நிதி அமைச்சருக்கு தெரியுமா?  தமிழ்நாட்டின் அரசுக்கு 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி நிதிச்சுமை இருக்குது என்று.  தேர்தல் பிரச்சாரத்தில் என் பேச்சை கேட்டிருந்தீர்கள் என்றால் தெரியும்.   தமிழ்நாட்டிற்கு 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதிச்சுமை இருக்குது என்று சொன்னேன். அதை எல்லாம் தெரிஞ்சுதான் நீங்க வாக்குறுதி அளித்தீர்கள்.   அதை தருகிறோம் இதை தருகிறோம் என்று பொய் வாக்குறுதிகள் அளித்து அப்புறம் ஆட்சியில் அமர்ந்துவிட்டு நிதிச்சுமை என்று சொல்லி வருகிறீர்கள்.

அர்

தமிழ்நாட்டின் நிதி சுமையை உணர்ந்துதான் பிஜேபியின் தேர்தல் அறிக்கை இருக்கும். ஆனால்,  திமுகவின் தேர்தல் அறிக்கை ஏன் அதை தருவோம் இதை தருவோம் என்றது .

பொருளாதாரத்தை பொறுத்தவரைக்கும் பாஜகதான் ஏழு ஆண்டுகள்சிறப்பான ஆட்சியை கொடுத்தது.  அதே நேரத்தில் அரசியல் தாண்டி இந்த கருத்தை நான் பதிவு செய்கிறேன்.  என்னிடம் ஒரு வருடம் கழித்து இதற்கான பதிலை கேளுங்கள்.   தமிழ்நாட்டி கடன் சுமை 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி.  இந்த வருடம் 70 ஆயிரம் கோடி ரூபாய் வாங்குகிறோம். மொத்தம் 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்.  ஒரு மாநிலம் எவ்வளவு கடன் வாங்க முடியும் என்றால், 25 சதவிகிதம்தான் வாங்க முடியும்.  இதே நிலைமையில் சென்றால் 2023ல் தமிழ்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு மாதம் சம்பளம் கொடுக்க பணம் இருக்காது.  இந்த நாளை குறிச்சுக்குங்க. ஏன் என்றால் அவங்க சொல்லுறது வேற செய்யுறது வேற’’என்றார்.  

ரன்

அவர் மேலும்,  ‘’20 ரூபாய்க்கு குவாட்டர் வாங்கி அதை 120 ரூபாய்க்கு விற்பதுதான் சாதனையா? இதற்கு ஒரு அரசு வேண்டுமா? இதைத்தான் ஒரு அரசின் வேலையாக ஒரு அமைச்சர் செய்துகொண்டிருக்கிறார்.  33 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டுவதற்கு ஒரு துறை.  அதற்கு 10 ஆயிரம் பணியாளர்கள்.  இதைத்தான் அரசு செய்துகொண்டிருகிறது.  2 லட்சத்து 40 ஆயிரம் கோடி வருமானம் இருக்குது. அதை என்ன செய்கிறீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார்.