செப்டம்பர் 2ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.. குஜராத் அரசு தகவல்

செப்டம்பர் 2ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.. குஜராத் அரசு தகவல்

செப்டம்பர் 2ம் தேதி முதல் குஜராத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் 2வது அலை தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. கேரளாவை தவிர பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் மற்றும் குறைவாக உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் நாடு முழுவதுமாக புதிதாக 37,593 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மேலும் 648 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

செப்டம்பர் 2ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.. குஜராத் அரசு தகவல்
விஜய் ரூபானி

நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. குஜராத் அரசும் பள்ளிகளை திறக்க தொடங்கியுள்ளது. தற்போது குஜராத் அரசு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மற்றும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் 32 லட்சம் மாணவர்களுக்கு இது பொருந்தும். அதாவது 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 32 லட்சம் மாணவர்கள் செப்டம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகளுக்கு சென்று பயிலாம்.

செப்டம்பர் 2ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.. குஜராத் அரசு தகவல்
பூபேந்திரசிங் சூடாசாமா

பள்ளிகள் மீண்டும் திறப்பது தொடர்பாக குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா கூறுகையில், இது குறித்து (பள்ளிகள் திறப்பு) விரிவான கலந்துரையாடல்களுக்கு பிறகு, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மாநில அரசு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு செய்தது என்று தெரிவித்தார்.