எடுத்தேன் கவிழ்த்தேன் என்றால்..திமுக அரசுக்கு விழுந்து இரண்டாவது குட்டுவை விமர்சிக்கும் பாஜக

 
ச்

இந்து கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில்,  தற்போது மேலும் ஒரு தடை உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.   இதையடுத்து 4 கல்லூரிகள் துவங்கப்பட்டு நடப்பாண்டு மாணவர் சேர்க்கையும் தொடங்கியது . அதனால் கோவையில் கல்லூரி துவங்க தடை கோரி டி. ஆர். ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஹ்ச்

 இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றபோது,    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது ஏற்கனவே துவங்கிய கல்லூரிகளின் செயல்பாடு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.   அறங்காவலர் இல்லாமல்,  நீதிமன்ற அனுமதி இல்லாமல் கூடுதல் கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்க கூடாது.  கல்லூரி துவங்கிய ஒரு மாதத்திற்குள் இந்துமத வகுப்புகள் நடத்தாவிட்டால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது என்று கூறிய நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.   மேலும் இதுதொடர்பான வழக்கை ஐந்து வாரங்களுக்கு ஒத்தி வைத்து இருக்கின்றனர். 

இந்த நிலையில்,  ‘’ஹிந்து அறநிலையத்துறை புதிய கல்லூரிகளை துவங்க கூடாது என்று  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு அளித்துள்ளது. எடுத்தேன்..கவிழ்த்தேன் என்ற ரீதியில் திமுக அரசு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதற்கு மேலும் ஒரு தீர்ப்பு. ஹிந்து அறநிலையத்துறை விவகாரங்களில் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதை எடுத்துக்கூறியும், தமிழக அரசு  உதாசீனப்படுத்தியதன் விளைவே இந்த உத்தரவு. ஹிந்து அறநிலைய துறை, கோவில்களின் நிர்வாகத்தை  மேற்பார்வையிடுவதற்காக உள்ளதே தவிர, நிர்வாகம் செய்ய அல்ல என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.