தமிழக இடைக்கால பட்ஜெட் தேதி அறிவிப்பு: வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கும் கலர் கலர் திட்டங்கள்!

தமிழக இடைக்கால பட்ஜெட் தேதி அறிவிப்பு: வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கும் கலர் கலர் திட்டங்கள்!

தமிழகத்தில் ஐந்தாண்டு அதிமுக ஆட்சிக்காலம் முடிவடையவிருக்கிறது. ஏப்ரல் மாதத்துடன் முடிவடையவிருப்பதால், தற்போது இடைக்கால பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் வேறு நெருங்கிவருவதால் இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் போல் அல்லாமல் ஒரு முழு பட்ஜெட் போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழக இடைக்கால பட்ஜெட் தேதி அறிவிப்பு: வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கும் கலர் கலர் திட்டங்கள்!

வாக்காளர்களைக் கவரும் வண்ணம் கலர் கலரான திட்டங்களை அறிவிக்க இருக்கிறார்களாம். அதாவது ஒவ்வொரு வகையான வாக்காளர்களுக்கும் ஒவ்வொரு ட்ரிட்மெண்ட் திட்டம் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் பட்ஜெட்டுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து வருகின்ற 22ஆம் தேதி பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.