தலித்துகளுடன் டீ குடியுங்க.. தேசியம் பெயரில் கட்சிக்கு வாக்கு கேளுங்க.. உ.பி. பா.ஜ.க. தலைவர்

 
ஸ்வதந்திர தேவ் சிங்

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் தலித் மக்களுடன் டீ அருந்திவிட்டு, அவர்களிடம் தேசியம் பெயரில் கட்சிக்கு வாக்குகளை கேளுங்க என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உத்தர பிரதேசம் லக்னோவில் வைசிய சமாஜ் சம்மேளனம் நிகழ்ச்சியை பா.ஜ.க. ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் பா.ஜ.க.வினர் மத்தியில் பேசுகையில், தொண்டர்கள் தலித்துகளுடன் தேநீர் அருந்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

ஸ்வதந்திர தேவ் சிங் பேசுகையில் பா.ஜ.க. தொண்டர்கள் 100 தலித்துகளுடன் தேநீர் அருந்தி, தேர்தலில் வாக்குகள் சாதி, பணம் மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் அல்ல தேசியவாதத்தின் அடிப்படையில் போடப்படுகின்றன என்பதை அவர்களுக்கு (தலித்துகள்) புரியவையுங்கள் என்று தெரிவித்தார். உ.பி. பா.ஜ.க. தலைவரின் இந்த பேச்சு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

தேர்தல்

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2022 பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை உள்ளதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்போதே தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.