4.5 வருஷம் எதுவும் செய்யமாட்டாங்க.. ஆனால் தேர்தல் நெருங்கும்போது மட்டும் செய்வாங்க.. பா.ஜ.க.வை தாக்கிய மாயாவதி கட்சி

 
சுதீந்திர பதோரியா

உத்தர பிரதேசத்தில் விரைவு சாலை தொடங்கப்பட்டதை குறிப்பிட்டு, 4.5 ஆண்டுகள் எதுவும் செய்யமாட்டாங்க ஆனால் தேர்தல் நெருங்கும்போது மட்டும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வார்கள் என்று பா.ஜ.க.வை  பகுஜன் சமாஜ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

உத்தர பிரதேசம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள கர்வால் கேரியில் போடப்பட்டுள்ள பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே சாலையை (விரைவு சாலை) பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.  இந்நிலையில் தேர்தல் நெருங்கும் போதுதான் பா.ஜ.க. மேம்பாட்டு பணிகளை மேற்கொள்கிறது என்று பகுஜன் சமாஜ் குற்றம் சாட்டியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதீந்திர படோரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க. தலைமையிலான உத்தர பிரதேச அரசு, சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், வளர்ச்சி பணிகள் மற்றும் விரைவு சாலை திறப்பு விழாக்களை மட்டுமே மேற்கொண்டுள்ளது.

பா.ஜ.க.

முன்பு அகிலேஷ் யாதவ் இதைத்தான் செய்தார். இப்போது பா.ஜ.க. அதை செய்கிறது. தேர்தலுக்கு முன் விரைவு சாலைகளை நினைவுப்படுத்துகிறார்கள், மற்ற வளர்ச்சி பணிகளை நினைவில் கொள்கிறார்கள். ஆனால் மீதமுள்ள 4.5 ஆண்டுகளாக அவர்கள் எதுவும் செய்யவில்லை. அவர்கள் தங்களது சொந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு, அற்பமான விஷயங்களுக்கு பணத்தை செலவிட்டனர். பா.ஜ.க.  அல்லது சமாஜ்வாடி கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த பணிகளை செய்யவில்லை என்பதை நான் கூற விரும்புகிறேன்.

புலம்பெயர்ந்தோரின் அவல நிலைக்கு காங்கிரசும், பா.ஜ.க.வுக்கும் சம பொறுப்பு உள்ளது…. மாயாவதி குற்றச்சாட்டு..

கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பணிகளை மாயாவதி ஜி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி செய்துள்ளது. இன்றும் அது தெரியும். மாயாவதி  காலத்தில் கட்டப்பட்ட உலக்த்தரம் வாய்ந்த யமுனா விரைவு சாலையை அகிலேஷ் யாதவ் ஒப்புக்கொள்ளவில்லை. இது இன்று இந்தியா முழுவதுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது. சமாஜ்வாடி அரசாங்கம் சாமானிய மக்களுக்கு பலன் அளிக்காத செயல்களை செய்தது. அவரது காலத்தில் நடந்த குற்றச் செயல்கள், கற்பழிப்பு சம்பவங்கள் சுதந்திர இந்தியாவில் இது மிகவும் வெட்கக்கேடான காலகட்டம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.