என் சகோதரி மால்விகா தேர்தலில் போட்டியிடுவார்.. நடிகர் சோனு சூட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 
சகோதரி மால்விகாவுடன் சோனு சூட்

தனது சகோதரி மால்விகா பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவார் என்று நடிகர் சோனு சூட் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

திரைப்படங்களில் வில்லனாக தோன்றினாலும் ரியல் லைப்பில் ஹீரோவாக வலம் வருபவர் பிரபல நடிகர் சோனு சூட். கொரோனா வைரஸின் முதல் அலையின்போது நெருக்கடியில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்தார். இது தவிர குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம், விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது போன்ற பல உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார். இந்நிலையில் தனது சகோதரி மால்விகா சச்சார் எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக சோனு சூட் தெரிவித்தார்.

பள்ளி குழந்தைகள் மத்தியில் மால்விகா

நடிகர் சோனு சூட் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மால்விகா நிச்சயமாக பஞ்சாபிற்கு சேவை செய்ய வருவார் என்ற நாங்கள் இன்று அதிகாரபூர்வமாக கூற விரும்புகிறோம். மால்விகா எந்த கட்சியில் சேரப்போகிறார் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருவருமே நல்ல மனிதர்கள்.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் தங்கள் உரிமைகளை பெறுவது அவசியம். அவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதனால் அவர்கள் தங்கள் வயல்களுக்கு திரும்ப முடியும்.  விவசாயிகளால்தான் இந்தியர்கள் சாப்பிடுகிறார்கள். எனவே அவர்களை மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம். பஞ்சாபில் சுகாதார அமைப்பை மேம்படுத்த வேண்டும். பஞ்சாபில் உள்ள கிராமங்களில் (நோயாளிகள்) யாரும் இல்லாத மருத்துவமனைகள் உள்ள. சில நேரங்களில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் கிடைப்பதில்லை. இந்த விஷயங்கள் சரியாக அமைக்கப்பட வேண்டும்.