பதவியை ராஜினாமா செய்த தெலங்கானா கலெக்டர்... காத்திருக்கும் மேலவை உறுப்பினர் பதவி

 
வெங்கட்ராம ரெட்டி

தெலங்கானாவில் சித்திபேட் மாவட்ட கலெக்டர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் டி.ஆர்.எஸ். கட்சியில் சேர உள்ளதாக தகவல்.

தெலங்கானாவில் சித்திபேட் மாவட்ட கலெக்டராக இருப்பவர் வெங்கட்ராம ரெட்டி. 2007 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான வெங்கட்ராம ரெட்டி நேற்று திடீரென பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக  அம்மாநில தலைமை செயலாளர் சோமேஸ் குமாரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவர் ஆளும் கட்சியான தெலங்கானாவில் சேர உள்ளதாக தகவல். மேலும் அந்த கட்சி சார்பாக அம்மாநில மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) வெங்கட்ராம ரெட்டி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டி.ஆர்.எஸ்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தெலங்கானாவில் சித்திபேட் மாவட்ட தலைமையகத்தில் புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தை அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். கட்டிட திறப்பு விழா முடிவடைந்ததும், முதல்வர் சந்திரசேகர் ராவை வெங்கட்ராம ரெட்டி தனது (கலெக்டர்) நாற்காலியில் அமர வைத்தார். பின் அவரது காலை தொட்டு வெங்கட்ராம ரெட்டி வணங்கினார். இது பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி எழும்பியது.

முதல்வர் கே.சந்திரசேகர் ராவிடம் ஆசிர்வாங்கிய வெங்கட்ராம ரெட்டி

மேலும், முதல்வரை திருப்திபடுத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சுயமரியாதை அவர் தியாகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் கலெக்டர் வெங்கட்ராம ரெட்டியோ, சுப நிகழ்ச்சிகளின் போது பெரியவர்களின் ஆசிர்வாதம் வாங்குவது தெலங்கானா கலாச்சாரத்தின் ஒரு அங்கம். புதிதாக நான் கலெக்டராக பொறுப்பேற்றபோது, தந்தைக்கு நிகரான முதல்வரிடம் ஆசிர்வாதம் பெற்றேன் என்று சாக்கு சொன்னார்.