நாட்டில் உள்ள அனைத்து தீவிரவாதிகளின் அரசியல் தாய் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.. சௌமித்ரா கான்

 
மம்தா பானர்ஜி

நாட்டில் உள்ள அனைத்து தீவிரவாதிகளின் அரசியல் தாய் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்று பா.ஜ.க.வின் சௌமித்ரா கான் குற்றம் சாட்டினார்.

மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் பஞ்சாப், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில், சர்வதேச எல்லையில், எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.) அதிகாரங்களை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த உத்தரவை திரும்பபெறக்கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதினார். மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியதை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சௌமித்ரா கான் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டில் உள்ள அனைத்து தீவிரவாதிகளின் அரசியல் தாய் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. ஏனென்றால் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அவர் (மம்தா பானர்ஜி) அதை எதிர்த்தார். ஏனென்றால் மம்தா பானர்ஜி இந்தியாவை தர்மசாலாவாக மாற்ற விரும்புகிறார். 

சௌமித்ரா கான்

ரோஹிங்கியாக்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, இங்குள்ள மக்களை கொன்று, இந்திய அரசின் பணத்தை கொள்ளையடிக்கும் தர்மசாலாவா இந்தியா?. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க மம்தா பானர்ஜி ரோஹிங்கியாக்களை ஆதரித்து வருகிறார். எல்லை பாதுகாப்பு படையின் எல்லை அதிகார வரம்பு 15 கி.மீட்டரிலிருந்து 50 கி.மீட்டராக உயர்த்தியதன் விளைவாக இப்போது தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முடியாது என்பதால் மம்மா பானர்ஜி அதிருப்தி அடைந்துள்ளார். அதனால்தான் பி.எஸ்.எப். எல்லை அதிகார வரம்பை அதிகரிக்கும் நடவடிக்கையை எதிர்க்கிறார், இது அவரது அரசியல்.

மோடி

மம்தா பானர்ஜியின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவி சாய்க்க கூடாது. மேற்கு வங்கத்தை அழித்த அதே வழியில் நாட்டையும் மம்தா பானர்ஜி அழிக்க விரும்புகிறார். அவர் (மம்தா பானர்ஜி) எப்போதாவது நாட்டின் கட்டமைப்பில் நம்பிக்கை வைத்திருக்கிறா? அவருக்கு அரசுகள் மீது நம்பிக்கை இல்லை. சட்டப்பேரவை விதிகளை பின்பற்றுவதில்லை. நாட்டை எதிர்ப்பதை அவருடைய வேலையாகி விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.