மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் போட்ட யோகி ஆதித்யநாத்.. கிண்டலடித்த அகிலேஷ் யாதவ்

 
யோகி ஆதித்யநாத், மோடி

பிரதமர் மோடியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை யோகி ஆதித்யநாத் டிவிட்டரில் பகிர்ந்ததை, அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று டிவிட்டரில், மோடியும், அவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து இருந்தார். மேலும், புதிய இந்தியாவ உருவாக்க உறுதி பூண்டுள்ளது. நாங்கள் ஒரு பயணத்தை தொடங்கினோம். நாங்கள் அனைத்தையும் அர்ப்பணித்து, புதிய ஒளியுடன் வானத்தையும் தாண்டி உயரங்களை தொடும் புதிய இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுத்துள்ளோம் என்று பதிவு செய்து இருந்தார்.

யோகி ஆதித்யநாத், மோடி

யோகி ஆதித்யநாத் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டல் செய்துள்ளார். அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், உலகின் நலனுக்காக சில நேரங்களில் அரசியலில் நீங்கள் இதை செய்ய வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார். அதாவது ஒரு இமேஜை உருவாக்க புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று அகிலேஷ் யாதவ் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2022 பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை உள்ளதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்போதே தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.