‘வேட்பு மனு நிறுத்தி வைப்பு’.. சிக்கலில் அதிமுக வேட்பாளர்!

 

‘வேட்பு மனு நிறுத்தி வைப்பு’.. சிக்கலில் அதிமுக வேட்பாளர்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. அன்றே துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து, கடந்த 15ம் தேதி ஒரு பட்டாளமே மனு தாக்கல் செய்தது. ஈபிஎஸ், ஸ்டாலின், டிடிவி தினகரன், சீமான் உள்ளிட்ட முதல்வர் வேட்பாளர்களும் அதிமுக அமைச்சர்களும் வரிசைக் கட்டிக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

‘வேட்பு மனு நிறுத்தி வைப்பு’.. சிக்கலில் அதிமுக வேட்பாளர்!

கடந்த 19ம் தேதி மாலை 3 மணியோடு வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று காலையில் இருந்து வேட்பு மனு பரிசீலனை செய்யும் பணி தொடங்கியிருக்கிறது. மனுவில் சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட விவரங்களை முறையாக குறிப்பிடாத வேட்பாளர்களின் மனுக்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன. அந்த வகையில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலையின் மனு குற்ற வழக்குகளை குறிப்பிடாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

‘வேட்பு மனு நிறுத்தி வைப்பு’.. சிக்கலில் அதிமுக வேட்பாளர்!

இந்த நிலையில், சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமியின் வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. வருமான வரி தொடர்பான ஆவணங்களில் விளக்கம் கேட்டு சைதை துரைசாமி வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனை எதிர்த்து, அதிமுக சார்பில் மா.சுப்பிரமணி போட்டியிடுகிறார். இவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இப்படி இருக்கும் சூழலில், வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் சிக்கலில் சிக்கியிருக்கிறார் சைதை துரைசாமி.