விவசாயிகளுக்கு உதவியதற்காக, எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை.. பஞ்சாப் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

 
மன்பிரீத் சிங் அயாலி

விவசாயிகளுக்கு உதவியதற்காக, வருமான வரித்துறை அதிகாரிகளால் எனது வளாகம் சோதனை செய்ததன் மூலம் நான் தண்டிக்கப்பட்டேன் என்று எஸ்.ஏ.டி. எம்.எல்.ஏ. மன்பிரீத் சிங் அயாலி குற்றம் சாட்டினார்.

பஞ்சாப் சிரோமணி அகாலி தளம் (எஸ்.ஏ.டி.) எம்.எல்.ஏ. மன்பிரீத் சிங் அயாலி. கடந்த செவ்வாய்க்கிழமையன்று வருமான வரித்துறை அதிகாரிகள் மன்பிரீத் சி்ங் அயாலிக்கு சொந்தமான 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை விவசாயிகளுக்கு உதவியதற்காக பழிவாங்கும் மத்திய அரசின் ஒரு முறையாகும் என்று மன்பிரீத் சிங் அயாலி குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு

சிரோமணி அகாலி தளம் (எஸ்.ஏ.டி.) எம்.எல்.ஏ. மன்பிரீத் சிங் அயாலி இது தொடர்பாக கூறியதாவது: விவசாயிகளுக்கு உதவியதற்காக, வருமான வரித்துறை அதிகாரிகளால் எனது வளாகம் சோதனை செய்ததன் மூலம் நான் தண்டிக்கப்பட்டேன். நாட்டின் மத்திய அரசால் ஏஜென்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் இயக்கத்தை (போராட்டம்) முடிவுக்கு கொண்டு வர அவர்கள் அதை பயன்படுத்துகிறார்கள். 

வருமான வரித்துறை

3 வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தது முதல் நான் விவசாயிகள் இயக்கத்தின் ஒரு அங்கமாகி விட்டேன். இனியும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பேன். எங்கள் குடும்பத்தின் முழு வணிகமும் முறையானது மற்றும் அனைத்து விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை பின்பற்றி வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதால் ரெய்டுகளில் எதுவும் கண்டறியப்படவில்லை. எனது செல்வத்தின் (சொத்து) பெரும் பகுதி மூதாதையர்கள் உடையது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.