மோடி ஜி பேசாம கிரிராஜ் சிங்கை இத்தாலிக்கான தூதராக நியமனம் செய்யுங்க… லாலு பிரசாத் கட்சி கிண்டல்

 

மோடி ஜி பேசாம கிரிராஜ் சிங்கை இத்தாலிக்கான தூதராக நியமனம் செய்யுங்க… லாலு பிரசாத் கட்சி கிண்டல்

ராகுல் காந்தியை டிவிட்டரில் இத்தாலி மொழியில் விமர்சனம் செய்ததால், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை இத்தாலிக்கான தூதராக நியமனம் செய்யுங்க என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கிண்டல் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் புதுச்சேரியில் மீனவர் கூட்டத்தில் பேசுகையில், டெல்லியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்க முடியும் என்றால், கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை என்று பேசியிருந்தார். அதாவது மத்தியில் மீன்வளத்துறைக்கு அமைச்சகம் உள்ளநிலையில், அது கூட தெரியாமல் மீன்வளத்துறைக்கு அமைச்சகம் இல்லை என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். இதனை மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் நக்கல் செய்து இருந்தார்.

மோடி ஜி பேசாம கிரிராஜ் சிங்கை இத்தாலிக்கான தூதராக நியமனம் செய்யுங்க… லாலு பிரசாத் கட்சி கிண்டல்
ராகுல் காந்தி

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் டிவிட்டரில், இத்தாலியில் தனியாக மீன்வளத்துறை அமைச்சகம் இல்லை. இது வேளாண்மை மற்றும் வனத்துறை அமைச்சகத்தின்கீழ் வருகிறது என்று இத்தாலி மொழியில் டிவிட் செய்து இருந்தார். கிரிராஜ் சிங் இத்தாலி மொழியில் டிவிட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் ஷா, இது தொடர்பாக கிரிராஜ் சிங்கை கிண்டலாக தாக்கியுள்ளார்.

மோடி ஜி பேசாம கிரிராஜ் சிங்கை இத்தாலிக்கான தூதராக நியமனம் செய்யுங்க… லாலு பிரசாத் கட்சி கிண்டல்
மனோஜ் ஷா

மனோஜ் ஷா இது தொடர்பாக கூறுகையில், அவருடைய (கிரிராஜ் சிங்) அமைச்சகத்தின் உண்மையை நாம் அறிவோம். இன்று (நேற்று) அவர் இத்தாலியில் டிவிட் செய்து இருந்ததை பார்த்தேன். ஆரம்பம் முதலே அவருக்கு தனது அமைச்சகத்தில் பணியாற்ற ஆர்வம் இல்லை, இத்தாலி மொழியில் அவருக்கு அபரிதமான அறிவு உள்ளது, ஆகையால் அவரை அந்நாட்டுக்கான (இத்தாலி) தூதர நியமனம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்துவேன். அந்நாட்டு பற்றிய அவருடைய அறிவு இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படுத்த உதவும் என்று தெரிவித்தார்.