சுட்டுக்கொண்டே ஓடியது.. தோட்டாக்கள்..செல்போன் சிக்னல்.. மத்திய அமைச்சர் மகனின் ஜாமீன் மறுப்புக்கான காரணங்கள்

 
அ

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தின்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா சென்றபோது ,  அவரை காரை மறித்து அவருக்கு எதிராகவும் விவசாயிகள் கருப்புக்கொடி காட்ட முயன்ற உள்ளனர்.  

 அப்போது விவசாயிகள் மீது காரை ஏற்றி சென்ற ஆஷிஸ் மிஸ்ரா,  அந்த வன்முறைச் சம்பவத்தில் பலர் உயிரிழக்க  விவசாயிகள் காரை சூழ்ந்து கொண்டதால் காரிலிருந்து இறங்கிய ஆசிஸ் மிஸ்ரா விவசாயிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.   இந்த வன்முறையில் பத்திரிக்கையாளர் ஒருவரும் பாஜகவை சேர்ந்த 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.  

ல்

 ஆனால் ஆஷிஸ் மிஸ்ராவின் தந்தை,  சம்பவம் நடந்த இடத்தில் தனது மகன் இல்லை என்றும், அவரின்  கார்தான் சென்றதே தவிர ஆசிஸ் மிஸ்ரா செல்லவில்லை என்றார்.   ஆனாலும் விவசாயிகளின் குற்றச்சாட்டின் பேரில் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஆசிஸ் மிஸ்ராவும் அவரது ஆதரவாளர்களும் ஜாமீன் கோரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.   அவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆசிஸ் மிஸ்ராவின் பெயர் விசாரணை அறிக்கையில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருப்பதாலும்,  சிறப்பு விசாரணை குழு போதுமான ஆதாரங்களை கைப்பற்றியுள்ளதாலும் ஆஷிஸ் மிஸ்ராவுக்கும்   அவரது கூட்டாளிகளுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது என்று சிறப்பு வழக்கறிஞர் எஸ் பி. யாதவ் தெரிவித்திருக்கிறார்.

லக்

 மேலும்  ஆஷிஸ் மிஸ்ராவுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டு விவகாரம் குறித்து அரசு வழக்கறிஞர் அரவிந்த் திரிபாதி,  விவசாயிகள் மீது காரை ஏற்றப்பட்ட பின்னர் ஆசிஸ் மிஸ்ரா அந்த இடத்தை விட்டு ஓடிதற்கான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.  60க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதை உறுதி செய்துள்ளனர்.   தார் ஜீப்பில் டிரைவர் இருக்கைக்கு பக்கத்தில் ஆஷிஸ் மிஸ்ரா அமர்ந்திருந்ததாக சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.    சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் ஆஷிஸ் மிஸ்ராவின் மொபைல் லொகேஷன்  வன்முறை நடந்த இடத்தில் இருந்ததைக் காட்டுகிறது.  இந்த விசாரணையில் அவர் விவசாயிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே கரும்பு வயலை நோக்கி ஓடியதும் தெரியவந்திருக்கிறது.   தடய அறிவியல் அறிக்கையில் அவரது துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள்  சுடப்பட்டுள்ளது   தெரிய வந்திருக்கிறது.   ஆஷிஸ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டுகள் இப்படி தீவிரமாக இருப்பதாலும்,  விசாரணை நிலுவையில் இருப்பதாலும்  அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு இருக்கிறது இந்த தெரிவித்துள்ளார்.