சச்சின் பைலட் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தால் அது பேரழிவை ஏற்படுத்தும்.. முதல்வரின் ஆலோசகர்

 
கோட்டா குழந்தைகள் இறப்பு…. முந்தைய பா.ஜ.க. அரசை குறை கூறுவதில் அர்த்தமில்லை… காங்கிரஸ் துணை முதல்வர் சச்சின் பைலட்

சச்சின் பைலட் தலைமையில் அடுத்து வரும் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் சந்தித்தால், அது பேரழிவை தரும் என்று முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகர் கூறியிருப்பது கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018ல் நடைபெற்ற ராஜஸ்தான்  சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.  இந்த வெற்றிக்கு காங்கிரசின் இளம் தலைவரான சச்சின் பைலட்டும் ஒரு காரணம் , இதனால் அவரை முதல்வராக காங்கிரஸ் தலைமை நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூத்த தலைவர் அசோக் கெலாட்டை காங்கிரஸ் தலைமை முதல்வராகவும், துணை முதல்வராக சச்சின் பைலட்டையும் நியமனம் செய்தது. அது முதல் சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

ராம்கேஷ் மீனா

இந்நிலையில் சச்சின் பைலட்டை சமாதானம் செய்யும் நோக்கில், கடந்த  சில தினங்களுக்கு முன் ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 5 பேர் இடம் பிடித்தனர். இதனால் சச்சின் பைலட் சமாதானம் அடைந்தார் என்றும், இனி ராஜஸ்தான் காங்கிரசில் கருத்து வேறுபாடு இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் காங்கிரஸில் வேறுபாடு உள்ளது என்பதை தற்போது மற்றொரு சம்பவம் உறுதி செய்துள்ளது. 

காங்கிரஸ்

முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகர் ராம்கேஷ் மீனா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: சச்சின் பைலட் தலைமையில் நாங்கள் தேர்தலுக்கு சென்றால், நான் கட்சி தலைமையை சந்தித்து, அவர் (சச்சின் பைலட்)  ஏற்கனவே ராஜஸ்தானில் டிக்கெட்டை ரத்து செய்து கட்சியை  சேதப்படுத்தியதன் மூலம் கலகம் செய்தார் என்று அவர்களிடம் கூறுவேன். 2023ல் நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலை சச்சின் பைலட் தலைமையில்  சந்தித்தால், கட்சிக்கு அதை விட மோசமான எதுவும் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.