ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம்.. 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு.. சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 5 பேருக்கு வாய்ப்பு

 
நான் அசோக் கெலாட் அரசை காப்பாற்ற முயற்சி செய்தேனா?.. மவுனத்தை கலைத்த பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜே…

ராஜஸ்தான் அமைச்சரவை நேற்று முதல் முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. 15 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். 

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அந்த கட்சியின் பிரபலமான இளம் தலைவருமான சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த ஒராண்டு மேலாக ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று குரல்கள் ஒலித்து வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் அமைச்சர்கள் 18 பேரும் ஒட்டு மொத்தமாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

பதவியேற்பு விழா

இதனையடுத்து நேற்று ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. ராஜஸ்தான் கவர்னர் மாளிகையில் மொத்தம் 15 பேர் அமைச்சர்களாக பதிவேற்றனர். ராஜஸ்தானின் புதிய அமைச்சரவையில் 12 புதிய முகங்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 5 பேரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பிறகு ராஜஸ்தான் அரசாங்கத்தில் மொத்தம் 30  அமைச்சர்கள் அடங்குவர். இதில் நேற்று முன்தினம் தங்களது பதவியை ராஜினாமா செய்த 18 பேரும் அடங்குவர். 

பதவியேற்பு விழா

கோவிந்த் ராம் மேக்வால், சகுந்தலா ராவத், ரமேஷ் மீனா, மம்தா பூபேஷ் பைர்வா, பஜன் லால் ஜாதவ், டீகரம் ஜூலி, ராஜேந்திர குடா மற்றும் ஜாஹிதாகான் உள்பட மொத்தம் 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 2018 டிசம்பரில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக இப்போதுதான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.