சீனாவுக்கு உதவும் மத்திய அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி இருக்க வேண்டும்… மோடி அரசை சாடிய ராகுல் காந்தி

சீனாவுக்கு உதவும் மத்திய அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி இருக்க வேண்டும்… மோடி அரசை சாடிய ராகுல் காந்தி

இந்தியாவுக்கு எதிராக வழக்கு தொடர சீனாவுக்கு உதவும் வகையில் பேசிய பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர் வி.கே. சிங்கை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும் என்று மத்திய அரசை ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

தமிழகத்தின் மதுரைக்கு வந்த முன்னாள் ராணுவ தளபதியும், தற்போதைய மத்திய அமைச்சருமான வி.கே.சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், சீனா ராணுவம் இந்திய எல்லைக்கும் 10 தடவை ஊடுருவினால், இந்திய ராணுவம் குறைந்தபட்சம் 50 தடவையாது சீன எல்லைக்குள் நமது ஊடுருவி பதிலடி கொடுத்திருக்கும். ஆனால் நமது ராணுவம் இதனை வெளியே சொல்வது இல்லை என்று தெரிவித்தார்.

சீனாவுக்கு உதவும் மத்திய அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி இருக்க வேண்டும்… மோடி அரசை சாடிய ராகுல் காந்தி
வி.கே.சிங்

மத்திய அமைச்சர் வி.கே.சிங் சொன்னதை மேற்கொள்காட்டி, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், இந்தியாவின் அத்துமீறல்கள் தான் இருநாடுகளுக்கும் இடையிலான நடைமுறை எல்லையில் நிலவும் பதட்டங்களுக்கு மூல காரணம் என்று நம் நாட்டின் மீது பழியை தூக்கி போட்டார். இதனையடுத்து வி.கே. சிங்கை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

சீனாவுக்கு உதவும் மத்திய அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி இருக்க வேண்டும்… மோடி அரசை சாடிய ராகுல் காந்தி
பா.ஜ.க.

ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், இந்தியாவுக்கு எதிராக வழக்கு தொடர சீனாவுக்கு பா.ஜ.க. அமைச்சர் ஏன் உதவுகிறார்? அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்யாதது ஒவ்வொரு இந்திய ராணுவ வீரரையும் அவமதிப்பதாகும் என்று பதிவு செய்தார். மேலும் தொடர்பாக வெளிவந்த செய்தியையும் அதில் பதிவேற்றம் செய்து இருந்தார்.