ஜன் தன் வங்கி கணக்குகளில் மோசடி.. மக்களின் பணத்துக்கு யார் பொறுப்பு?.. ராகுல் காந்தி கேள்வி

 
ராகுல் காந்தி

ஜன் தன் வங்கி கணக்குகளில்  பணப் பரிமாற்றத்தில் மோசடி நடந்துள்ளதாகவும், மக்களின் பணத்துக்கு யார் பொறுப்பு? என்று மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு  என்ற உயரிய நோக்கத்துடன் ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டது. பிரதமர் மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அளித்த தகவலின்படி, கடந்த  ஆகஸ்ட் நிலவரப்படி ஜன் தன் திட்டத்தின்கீழ்,  நம் நாட்டில் 43 கோடிக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் பெரும் பகுதியினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன் தன் கணக்கு தொடங்கியவர்கள்

ஜன்தன் திட்ட வங்கி கணக்குகள் மூலம் அனைவருக்கும் குறைந்த  செலவில் வங்கி சேவைகள் மட்டுமல்லாமல் ஜீரோ மினிமம் பேலன்ஸ், ஒரு லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு, ரூ.30 அயிரம் ஆயுள் காப்பீடு மற்றும் கடன்களில் சலுகைகள் ஆகியவையும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜன் தன் வங்கி கணக்குகளில் பணப் பரிமாற்றத்தில் ஊழல் நடந்ததுள்ளதாக ஊடக அறிக்கையை மேற்கொள் காட்டி, மத்திய அரசை ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். எஸ்.பி.ஐ. ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து மொத்தம் ரூ.164 கோடியை பிடித்தம் செய்துள்ளது என்று ஐஐடி பாம்பே நடத்திய ஆய்வறிக்கையை மேற்கொள்காட்டி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ.

ராகுல் காந்தி டிவிட்டரில், ஜன் தன் கணக்குகளில் மோசடி நடந்துள்ளதாக கூறும் ஊடக அறிக்கையை பதிவேற்றம் செய்து இருந்தார். அந்த ஊடக அறிக்கையில், 2017 மற்றும் 2020 செப்டம்பர் இடையில் யு.பி.ஐ. மற்றும் ரூபே கார்டு மூலம் பரிவர்த்தனை செய்ததற்காக ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து வங்கி மொத்தம் ரூ.254 கோடி வசூலித்துள்ளது. அதாவது ஒவ்வொரு கணக்கிலிருந்தும் வங்கி சராசரியாக ரூ.17.70 வசூல் செய்துள்ளது என்று வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி இந்த அறிக்கையுடன் மக்களின் பணத்துக்கு யார் பொறுப்பு? கொள்ளை என்று பதிவு செய்து இருந்தார்.