‘ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க’ மதுரை வந்தடைந்தார் ராகுல் காந்தி!

 

‘ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க’ மதுரை வந்தடைந்தார் ராகுல் காந்தி!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிவிட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியின், 3ஆவது சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகம் வரவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

‘ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க’ மதுரை வந்தடைந்தார் ராகுல் காந்தி!

அதன் படி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மதுரை வந்தடைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் பலத்த வரவேற்பு அளித்தனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து காரில் அவனியாபுரம் வந்த ராகுல் காந்தி, ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களிக்கிறார். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் தமிழகம் வரவிருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.