உ.பி சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி.. காங்கிரஸ் தொண்டர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு.. பிரியங்கா காந்தி

 
பிரியங்கா காந்தி

எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்றும், காங்கிரஸ் தொண்டர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் புலந்த்ஷாஹரில்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசுகையில் கூறியதாவது: எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கேட்டுக் கொண்டனர். நாம் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம், நாம் தனித்து போட்டியிடுவோம் என்று உங்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.

காங்கிரஸ்

உத்தர பிரதேசத்தின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமே கட்சி பரிந்துரைக்கும். காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்றால், தனித்து வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  முன்னதாக உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு கூறியதாவது: சமாஜ்வாடியும், பா.ஜ.க.வும் பிக்சிடு பைட்டில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் பெரும் பழைய கட்சி (காங்கிரஸ்) உண்மையான பிரச்சினைகளுக்காக போராடுகிறது.

அஜய் குமார் லாலு

எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வால் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன், பா.ஜ.க. தலைவர்கள் போய் வாக்கு கேட்டு என்ன நடக்கிறது என்று பார்க்கட்டும். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு இந்த பிரச்சினையில் மக்கள் கேள்வி கேட்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.