ஆஷா சகோதரிகள் மீதான ஒவ்வொரு தாக்குதலும், அவர்கள் செய்த பணியை அவமதிப்பதாகும்... உ.பி. அரசை சாடிய பிரியங்கா

 
பிரியங்கா காந்தி

உத்தர பிரதேச அரசு ஆஷா சகோதரிகள் மீது நடத்தும் ஒவ்வொரு தாக்குதலும், அவர்கள் செய்த பணியை அவமதிப்பதாகும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் ஷாஜஹான்பூரில் ஆஷா (அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்) பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது  பணியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. பெண் பணியாளர்கள் தாக்கப்பட்டதாக தகவல். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு முதல்வர்  யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசை காங்கிரஸ் பொதுச்சசெயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஆஷா பணியாளர்கள்

பிரியங்கா காந்தி டிவிட்டரில்  ஆஷா பணியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையிலான கைகலப்பு நடக்கும் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், உத்தர பிரதேச அரசு ஆஷா சகோதரிகள் மீது நடத்தும் ஒவ்வொரு தாக்குதலும், அவர்கள் செய்த பணியை அவமதிப்பதாகும். எனது ஆஷா சகோதாரிகள் கோவிட் தொற்றுநோய் மற்றும் பிற சந்தர்ப்பங்களில் தங்கள் சேவைகளை விடா முயற்சியுடன் வழங்கியுள்ளனர். 

உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்கு தடை; அதிர்ச்சி கிளப்பும் யோகி

கௌரவ ஊதியம் பெறுவது அவர்களின் உரிமை. அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டியது அரசின் கடமை. ஆஷா சகோதரிகள் மரியாதைக்கு தகுதியானவர்கள். இந்த போராட்டத்தில் அவர்களுடன் நான் இருக்கிறேன். ஆஷா சகோதரிகளுக்கு கவுரவ ஊதியம் வழங்குவதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. எங்கள் அரசு அமைந்தால், ஆஷா சகோதரிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,000 கவுரவ ஊதியம் வழங்கப்படும் என்று பதிவு செய்துள்ளார்.