தளர்வுகளற்ற முழு ஊரடங்கு… அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

 

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு… அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 24ஆம் தேதியோடு முழு ஊரடங்கு உத்தரவு முடிவடைய இருக்கும் நிலையில், பாதிப்பு சற்றும் குறையாததால் ஊரடங்கை நீடிப்பது குறித்து இன்று காலை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் குழு அரசுக்கு பரிந்துரைத்தது.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு… அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

மருத்துவ நிபுணர்கள் குழுவுடனான ஆலோசனையை தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு குறித்து ஆலோசிக்க ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒவ்வொரு எம்.எல்.ஏ வீதம் 13 பேர் கொண்ட குழுவை அரசு நியமித்திருந்தது. அந்தக் குழுவில் அதிமுகவில் இருந்து விஜயபாஸ்கர், பாஜகவில் இருந்து நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அந்த 13 எம்எல்ஏக்களுடன் தான் தற்போது ஆலோசனை நடந்து வருகிறது.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு… அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

ஆலோசனைக் கூட்டத்தின் போது கட்சிகளின் நிலைப்பாட்டை எடுத்துரைக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அப்போது பால், காய்கறி, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி தரவேண்டும் என்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்க வேண்டும் என அதிமுக தரப்பில் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். ஐந்து நாட்களுக்கு ஒரு நாள் மட்டும் அத்தியாவசிய கடைகளை திறக்க வேண்டுமென்றும் தனியார் மருத்துவமனைகள் சிடி ஸ்கேன் செய்வதற்கான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் பாமக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என காங்கிரஸ், பாஜக, மதிமுக ஆகிய கட்சிகள் ஒருமித்த கருத்துக்களை முன்வைத்துள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவின் கோரிக்கைகளின் அடிப்படையில், முழு ஊரடங்கு குறித்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலைக்குள் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.