’’’அரசியல் எதிரிகளை உப்பு மூட்டைக்குள் அடைத்து ரத்தம் சிந்தாமல் அழிக்க வேண்டும்’’

 
cப்

ஒரே நாடு ஒரே சட்டமன்ற தளம் என்கிறார் மோடி.   இதன் அடுத்த கட்டம் "ஒரே நாடு ஒரே நாடாளுமன்றம்"தான். ஆர்எஸ்எஸ்சின் குருஜி கோல்வால்கர் மாநில சட்டமன்றங்கள் தேவையில்லை என்று ஒற்றை ஆட்சி முறையை வலியுறுத்தியிருக்கிறார். அடுத்த 25ஆண்டுகளில் அதை நாேக்கி செல்வதே இவர்களின் இலக்கு என்று மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்  சொல்ல, 

அப்படி சொல்லியிருந்தால்  தவறில்லை. "மேற்குவங்காளத்தில் செய்வது போல், அரசியல் எதிரிகளை கடத்தி உப்பு மூட்டைக்குள் அடைத்து உயிரோடு படுகுழிக்குள் புதைத்து ரத்தம் சிந்தாமல் அழிக்க வேண்டும்"என பினராயி விஜயன் கூறியிருக்கிறார்.  அதிகாரத்தை அடைவதற்கு, அதை நோக்கி செல்வதே 'கம்மி'களின் இலக்கு என்று பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

பி

  கேரள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்துல்லா குட்டி என்பவர் இப்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.   தான் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது எதிரிகளை வங்காள முறையில் ரத்தம் சிந்தாமல் கொன்று குவிக்க வேண்டும்.  எதிரிகளை உப்பு அடங்கிய சாக்குமூட்டையில் மறைத்துவைத்து ஆழமான குழிக்குள் போட்டு விட வேண்டும்.   அப்படி செய்தால் ரத்தம் இல்லாமல் எந்த தடயமும் இல்லாமல் வங்காள முறையில் கொன்று விடலாம் என்று பினராயி விஜயன் சொன்னதாக அப்துல் குட்டி 2008ல் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

ஜ்ஜ்

அப்துல்லா குட்டி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தது அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி .  ஆனால் கேரள மாநிலத்தில் கடந்த 17 ஆண்டுகளில் 172 அரசியல் கொலைகள் நடந்து இருக்கின்றன என்றும்,  அதில் அதிகப்படியான கொலைகள் கம்யூனிஸ்ட் அரசு கேரளாவை ஆளும்போது தான் நடந்திருக்கிறது.  அதிலும் அதிகப்படியான கொலைகள் கேரள முதல்வர் பிறந்த இவரின் சொந்த ஊர் சொந்த ஊரான கல்லூரியில்தான் நிகழ்ந்திருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

ன