“அடுத்த 10 ஆண்டிற்கான திட்டங்கள்” திருச்சியை கலக்கும் திமுக மாநாடு!

“அடுத்த 10 ஆண்டிற்கான திட்டங்கள்”  திருச்சியை கலக்கும் திமுக மாநாடு!

தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காலை 11 மணிக்கு திருச்சி வரும் ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு விழாவில் பங்கேற்கிறார்.

“அடுத்த 10 ஆண்டிற்கான திட்டங்கள்”  திருச்சியை கலக்கும் திமுக மாநாடு!

‘விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திருச்சி அருகே சிறுகனூரில் திமுக சார்பில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி செல்ல உள்ளார் . திமுகவின் இந்த மாநாட்டில் அடுத்த 10 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்தும், பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகவுள்ளது.

“அடுத்த 10 ஆண்டிற்கான திட்டங்கள்”  திருச்சியை கலக்கும் திமுக மாநாடு!

மு.க.ஸ்டாலின் திமுக கொடியேற்றி, மாபெரும் பொதுக்கூட்டத்தை துவக்கி வைக்கும் நிலையில் முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் குறித்த காணொளிகள் ஒளிபரப்பப்படவுள்ளன. பின்னர் பிற்பகல் 2.50 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு எம்எல்ஏ வரவேற்புரை வாசிக்கிறார்.

“அடுத்த 10 ஆண்டிற்கான திட்டங்கள்”  திருச்சியை கலக்கும் திமுக மாநாடு!

இதை தொடர்ந்து பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி ஆகிய துறைகள் குறித்து டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி. பேசுகிறார். அத்துடன் மாலை 4 மணிக்கு தமிழ்ப் பண்பாடு மற்றும் பெருமையைப் பறைசாற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூகநீதி ஆகிய துறைகள் குறித்து பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசுகிறார். இதை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு உரையாற்ற உள்ள மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.