மத்திய அரசு சில மாநில அரசுகளுடன் இணைந்து கோவிட் பாதிப்பு எண்ணிக்கை குறைத்து காட்டுகிறது.. ப.சிதம்பரம்

 

மத்திய அரசு சில மாநில அரசுகளுடன் இணைந்து கோவிட் பாதிப்பு எண்ணிக்கை குறைத்து காட்டுகிறது.. ப.சிதம்பரம்

மத்திய அரசு சில மாநில அரசாங்களுடன் இணைந்து கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை குறைத்து காட்டுகிறது என ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் சக்திசிங் கோஹில் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது குஜராத்தில் நிகழ்ந்த இறப்புகள் தொடர்பாக பத்திரிகையில் ஒன்று வெளியாகி இருந்த செய்தியை குறிப்பிட்டு அம்மாநில மற்றும் மத்திய அரசை விமர்சனம் செய்தனர். அந்த செய்தித்தாளில், குஜராத்தில் கடந்த மார்ச் 1 முதல் கடந்த 10ம் தேதி வரையிலான காலத்தில் 1.23 லட்சம் இறப்பு சான்றிதழ்களை மாநில அரசு வழங்கியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் 58 ஆயிரம் இறப்ப சான்றிதழ்கள் மட்டுமே அரசு வழங்கியிருந்தது என்று செய்தி வெளியாகி இருந்தது.

மத்திய அரசு சில மாநில அரசுகளுடன் இணைந்து கோவிட் பாதிப்பு எண்ணிக்கை குறைத்து காட்டுகிறது.. ப.சிதம்பரம்
கொரோனாவால் இறந்தவர் உடல்

ப.சிதம்பரம் பேசுகையில், கடந்த மார்ச் 1 முதல் மே 10ம் தேதி வரையிலான காலத்தில் குஜராத் அரசு கொரோனாவால் 4,218 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் சுமார் 65 ஆயிரம் இறப்புகள் அதிகரித்துள்ளது. இதற்கும் கோவிட் இறப்பக்கும் இடையிலான வேறுபாடு குறித்து விளக்கப்பட வேண்டும். இந்த அதிகரிப்பு இறப்புகளின் எண்ணிக்கையில் இயற்கையான வருடாந்திர அதிகரிப்பு என்று விளக்கம் சொல்ல முடியாது. எனவே அதிகரித்த இறப்புகளில் பெரும் கோவிட் தான் காரணமாக இருக்கலாம். கோவிட் தொடர்பான இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை மாநில அரசு குறைத்து காட்டுகிறது என்று எங்களுக்கு வலுவான சந்தேகம் உள்ளது.

மத்திய அரசு சில மாநில அரசுகளுடன் இணைந்து கோவிட் பாதிப்பு எண்ணிக்கை குறைத்து காட்டுகிறது.. ப.சிதம்பரம்
மத்திய அரசு

அடையாளம் காணப்படாத நூற்றுக்கணக்கான உடல்கள் கங்கை நதியில் மிதப்பதும், கிட்டத்தட்ட 2000 அடையாளம் தெரியாத உடல்கள் கங்கை மணலில் புதைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எங்களது சந்தேகங்களை உறுதி செய்கின்றன. மத்திய அரசு சில மாநில அரசாங்களுடன் இணைந்து புதிய நோய்தொற்று மற்றும் கோவிட் தொடர்பான இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை குறைத்து காட்டுகிறது என்பதில் எங்களுக்க வலுவாக சந்தேகம் உள்ளது. எங்கள் சந்தேகங்கள் உண்மையாக இருந்தால் இது ஒரு தேசிய அவமானம் மற்றும் ஒரு தேசிய சோகம் என்பதை தவிர ஒரு மோசமான தவறு. மத்திய அரசும், குஜராத் அரசும் இந்திய மக்களுக்கு விளக்கத்தை கொடுக்க வேண்டும். நாங்கள் பதிலையும், விளக்கத்தையும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.