புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு; உயர் நீதிமன்றத்தை நாடும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

 

புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு; உயர் நீதிமன்றத்தை நாடும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ், ஈபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

அதிமுக செய்தி தொடர்பாளர் மற்றும் ஜெயலலிதா பேரவை இணைச் செயலராக பதவி வகித்த புகழேந்தி அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது குறித்து சில அவதூறு கருத்துக்களை வெளியிட்டதால் அவரை கட்சியிலிருந்து நீக்கி கடந்த ஜூன் 6ம் தேதி ஓபிஎஸ் ஈபிஎஸ் உத்தரவிட்டனர். இதையடுத்து, ஓபிஎஸ் ஈபிஎஸ்க்கு எதிராக சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் புகழேந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு; உயர் நீதிமன்றத்தை நாடும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

அவர் அளித்திருந்த மனுவில், கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன் தன்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. முறையான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, 24ம் தேதி நேரில் ஆஜராக ஓபிஎஸ் ஈபிஎஸ்க்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு; உயர் நீதிமன்றத்தை நாடும் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

இந்த நிலையில், புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆகஸ்ட் 24ஆம் தேதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் அதிமுகவின் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.