நேரு காலத்தில் இருந்த மாதிரி இப்பம் காங்கிரஸ் இல்லை.. யோகானந்த் சாஸ்திரி

 
நேரு

நேரு காலத்தில் இருந்த மாதிரி இப்பம் காங்கிரஸ் இல்லை அதனால் அந்த கட்சியிலிருந்து விலகியதாக தேசியவாத காங்கிரசில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் யோகானந்த் சாஸ்திரி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யோகானந்த் சாஸ்திரி நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கமாக இருந்தவர். 2008 முதல் 2013 வரை டெல்லி சட்டப்பேரவையின் சபாநாயகராக பதவி வகித்தவர். டெல்லியின் முன்னாள் முதல்வர் மறைந்த ஷீலா தீட்சித்  அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தவர். 2020ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். 

யோகானந்த் சாஸ்திரி

இந்நிலையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முன்னிலையில் அந்த கட்சியில் யோகானந்த் சாஸ்திரி இணைந்தார். தேசியவாத காங்கிரசில் இணைந்த பிறகு யோகானந்த் சாஸ்திரி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நாம் நாம் கலாச்சாரத்தை நாம் நம்புகிறோம். ஒரு நபர் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும், நான் என்னை காலியாக (சும்மா) வைத்திருக்கவில்லை. கட்சி (காங்கிரஸ்) எனக்கு வேலை தரவில்லை. 

தேசியவாத காங்கிரஸ்

அதனால் தான் தேசியவாத காங்கிரசில் இணைந்தேன். காங்கிரஸ் மாறி விட்டது.நேரு காலத்தில் இருந்த காங்கிரஸ் அல்ல. கடசி பணியில் பங்களிக்க விரும்புவோருக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. நான் கட்சி தலைமையை குறை கூறவில்லை. ஆனால் உங்களுக்கு கள உண்மை தெரியும். கட்சி தலைமை தவறு செய்யவில்லை ஆனால் கீழ் மட்ட அளவில் கட்சி சரியாக இல்லை, மக்களுக்கு மரியாதை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.