இன்று இந்தியாவிலேயே அதிக கடன்பட்டுள்ள மாநிலம் பஞ்சாப்தான்.. சொந்த கட்சி அரசாங்கத்தை தாக்கும் சித்து

 
நவ்ஜோத் சிங் சித்து

இன்று இந்தியாவிலேயே அதிக கடன்பட்டுள்ள மாநிலம் பஞ்சாப்தான் என்று காங்கிரஸ் அரசாங்கத்தை நவ்ஜோத் சிங் சித்து விமர்சனம் செய்து இருப்பது அந்த கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து தனது சொந்த கட்சி அரசாங்கத்தை தாக்கி வருகிறார். இது பஞ்சாப் காங்கிரசாருக்கு  கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.  தற்போது பஞ்சாபின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து தடம் புரள வேண்டாம் என்று காங்கிரஸ் அரசாங்கத்தை சித்து விமர்சனம் செய்துள்ளார்.

கடன்

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இன்று இந்தியாவிலேயே அதிக கடன்பட்டுள்ள மாநிலம் பஞ்சாப். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பில் 50 சதவீதம் அளவுக்கு கடன் உள்ளது. நமது செலவினங்களில் பாதி அதிக வட்டி கடனால் ஏற்படுகிறது. 2022ம் ஆண்டுக்கு (தேர்தலுக்கு) பிறகும் பஞ்சாப் இருக்கிறது என்பதால், ஒவ்வொரு பஞ்சாபியும், கட்சி தொண்டர்களும் தீர்வை கோரும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து தடம் புரள வேண்டாம்

காங்கிரஸ்

நிதி பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை பஞ்சாப் மாடலின் தூண்கள். ஒவ்வொரு திட்ட அறிவிப்பிலும், வருமானத்தில் இருந்தோ அல்லது அதிக கடனிலிருந்தோ நிதி ஆதாரங்கள் பெறுவதை வெளிப்படுத்துவதை பொறுப்புக்கூறல் கோருகிறது. ஒவ்வொரு மாதமும்  பொது மாநிலத்தின் நிதி ஆரோக்கியத்தில் வெளிப்படைத்தன்மை கோருகிறது. வரிகள் கடனை தீர்க்க போகாமல், வளர்ச்சியின் வடிவில் மக்களிடம் திரும்ப செல்ல வேண்டும். மாநிலத்தின் வளங்கள் திருடப்படுவதை நிறுத்துவது, அரசு கருவூலத்தை நிரப்புவது, வருமானம் ஈட்டுவதன் மூலம் நலன்புரி அரசை உருவாக்குவதே தீர்வு சார்ந்த மாதிரி என்று பதிவு செய்துள்ளார்.