அன்பு நண்பா என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்…எஸ்.வி.சேகர்

அன்பு நண்பா என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்…எஸ்.வி.சேகர்

பிரபல நடிகர் வாகை சந்திரசேகர். திமுக பிரமுகரான இவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்எல்ஏவாக இருந்தவர். 1990 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தற்போது தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அன்பு நண்பா என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்…எஸ்.வி.சேகர்

இந்த மன்றத்தின் தலைவராக இசையமைப்பாளர் தேவா செயல்பட்டு வந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில் புதிய தலைவராக நடிகர் வாகை சந்திரசேகரை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரிய தலைவர் பதவியையும் அவர் வகிப்பார் என்று அறிவித்துள்ளார் முதல்வர்.

அன்பு நண்பா என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்…எஸ்.வி.சேகர்

இதுகுறித்து நடிகரும் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வி. சேகர், ‘’ அன்பு நண்பா என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.