“சரத்குமார் போவார், வருவார்; அவரைப் பற்றி கவலை இல்லை” : அமைச்சர் செல்லூர் ராஜூ

 

“சரத்குமார் போவார், வருவார்;  அவரைப் பற்றி கவலை இல்லை” : அமைச்சர் செல்லூர் ராஜூ

நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“சரத்குமார் போவார், வருவார்;  அவரைப் பற்றி கவலை இல்லை” : அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை கோரிப்பாளையத்தில் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், ” எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. ஜெயலலிதா, எம்ஜிஆர் இருந்த நிலை தற்போது இல்லை. அவர்களை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. நாம் கடுமையாக உழைத்தால் மட்டுமே நமக்கு வெற்றி கிடைக்கும். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த இரண்டு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதை மனதில் வைத்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் செயல்பட வேண்டும்” என்றார்.

“சரத்குமார் போவார், வருவார்;  அவரைப் பற்றி கவலை இல்லை” : அமைச்சர் செல்லூர் ராஜூ

தொடர்ந்து பேசிய அவர்,” நான் எனது தொகுதியை மட்டும் மனதில் வைத்து பணியாற்றவில்லை. நான்கு தொகுதிகளுக்கும் சிறப்பான திட்டங்களை நாம் செய்துள்ளோம். நமது கட்சிக்கு யாரும் துரோகம் செய்யக் கூடாது .அப்படி நீங்கள் செய்தால் துரோகியா ஆகிவிடுவீர்கள். உங்கள் பிள்ளைகள் கூட உங்களை மதிக்காது. ஆமை வேகத்தில் பணி செய்வது எனக்கு வருத்தமாக உள்ளது. மதுரைக்கு எந்த திட்டமும் செய்யாத திமுக அடுத்த ஆட்சி நாங்க தான் என்று கூறுகிறார்கள். ஆனால் பல வளர்ச்சி திட்டங்களை நாம் கொடுத்துள்ளேன். நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ” கூட்டணியிலிருந்து சரத்குமார் போவார், வருவார். அவரைப் பற்றி கவலை இல்லை. அவர் நடிகர் என்ற முறையில் கூட கமலை சந்தித்து இருக்கலாம். நாளைக்கே அவர் மனசு மாறி வரலாம் ” என்றார். முன்னதாக அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, அக்கட்சியிலிருந்து விலகி ஐஜேகே உடன் கூட்டணி அமைத்துள்ளது. அத்துடன் இந்த கூட்டணியில்கமலின் மக்கள் நீதி மய்யமும் இணைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.