திமுக- காங்கிரஸ் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே முறிந்துவிடும்- அமைச்சர் ஜெயக்குமார்

 

திமுக- காங்கிரஸ் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே முறிந்துவிடும்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரிய வாய்ப்பு உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவல்லிக்கேணியில் மினி கிளினிக்கை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “சென்னையில் இதுவரை 141 அம்மா கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி முன் அனைத்து வார்டுகளிலும் மினி கிளினிக் திறந்து வைக்கப்படும். ஜெ நினைவிடத்தில் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் 24ஆம் தேதிக்கு முன் பொதுமக்கள் பார்வைக்கு திறக்க வாய்ப்பு இல்லை. அந்த பணிகள் முடிந்த பின்பே திறக்கப்படும். சகாயம் ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்ட யார் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், வரட்டும். அவருடைய கொள்கைகளை அறிவிக்கட்டும்.

திமுக- காங்கிரஸ் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே முறிந்துவிடும்- அமைச்சர் ஜெயக்குமார்

திமுக காங்கிரஸ் கூட்டணி நெல்லிக்காய் மூட்டை போல போகிறது. திமுக எம்எல்ஏ புதுச்சேரியில் ராஜினாமா செய்திருக்கிறார். அவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையே அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் அதிமுக திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே கூட பிரிந்துவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதிமுக ஒரு எஃகு கோட்டை. எங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது பங்கீடு, குறித்து பேசப்பட்டு வருகிறது, எல்லாம் உரிய காலத்தில் தெரியவரும். அது ஒரு வடிவம் பெறும்போது எந்த கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்பது தெரியவரும்” எனக் கூறினார்.