முஸ்லிம்களை புண்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை அரசாங்கம் திரும்ப பெற வேண்டும்.. மௌலானா அர்ஷ் மதானி

 
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் (கோப்புப்படம்)

முஸ்லிம்களை புண்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் என்று மௌலானா அர்ஷ் மதானி என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக, 2014ம் ஆண்டுக்கு முன் இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இந்த சட்டத்துக்கு கடும் சமுதாயத்தின் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மௌலானா அர்ஷ் மதானி

மத்திய அரசு சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் தற்போது குடியுரிமை திருத்த சட்டத்தையும் மோடி அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தள்ளது. ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் தேசிய தலைவர் மௌலானா அர்ஷ் மதானி இது தொடர்பாக கூறுகையில்,  குடியுரிமை திருத்த சட்டமும் ரத்து செய்யப்பட வேண்டும் இல்லையெனில் முஸ்லிம் சமூகம் அதன் சுமைகளை சுமக்க வேண்டியிருக்கும். தேர்தல் நெருங்கி வருவதால் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. 

தேசிய குடிமக்கள் பதிவேடு

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தேசியத்துடன் தொடர்புடையது என்று நாங்கள் நினைக்கிறோம். பொது மக்கள் பலம் வாய்ந்த அதிகாரம். எனவே இதுவும் (சி.ஏ.ஏ.) ரத்து செய்யப்பட வேண்டும். அதேபோல், முஸ்லிம்களை புண்படுத்தும் சட்டத்தை அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களும் மற்றவர்களை போலவே இந்தியாவின் குடிமக்கள் அவர்கள் பாதிக்கப்பட்டால் அரசும் அதே மாதிரி உணர வேண்டும் என்று தெரிவித்தார்.