தாராளமயம், மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே காங்கிரசில் இருக்க வேண்டும்... மணிஷ் திவாரி

 
அகமது படேல் விவகாரம்… மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு சமீபத்திய உதாரணம்.. மனிஷ் திவாரி

தாராளமயம் மற்றும் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை  கொண்டவர்கள் மட்டுமே காங்கிரசில் இருக்க வேண்டும் என்று மணிஷ் திவாரி வலியுறுத்தினார்.

சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராகுல் காந்தி, சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் இந்து மதம், இந்துத்துவா தொடர்பாக கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், கட்சியின் அடிப்படை சித்தாந்தத்திலிருந்து இந்துத்துவா வெகு தொலைவில் உள்ளதால் அது குறித்து காங்கிரஸ் கட்சியினர் விவாதத்தில் ஈடுபட கூடாது என்று மணிஷ் திவாரி வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மணிஷ் திவாரி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரசின் தத்துவார்த்த அடிப்படையில் இந்த (இந்துத்துவா) விவாதத்தில் ஈடுபடக்கூடாது. இது (இந்துத்துவா) காங்கிரஸ் கட்சியின் அடிப்படை சித்தாந்தத்திலிருந்து மைல்கள் தொலைவில் உள்ளது. 

காங்கிரஸ்
கடந்த காலங்களில் காங்கிரசின் சில தலைவர்கள் மென்மையான இந்துத்துவா அணுகுமுறையை கடைப்பிடிக்க முயன்றதால், கட்சி அதன் அடிப்படை சித்தாந்தத்தில் ஒட்டிக் கொள்ள வேண்டும், அதிலிருந்து விலகக்கூடாது. தாராளமயம் மற்றும் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை  கொண்டவர்கள் மட்டுமே காங்கிரசில் இருக்க வேண்டும். இல்லையெனில், மதம்  அரசியலின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால் நீங்கள் வலதுசாரி கட்சிகளில் இருக்க வேண்டும், மதச்சார்பின்மையை  நம்பும் காங்கிரசில் அல்ல.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.

மேலும் மணிஷ் திவாரி டிவிட்டரில், இந்து மதம், இந்துத்துவா இடையிலான விவாதத்தில் காங்கிரசில் உள்ள சிலர் அடிப்படை கருத்தை தவறவிடுகிறார்கள். எனது மத அடையாளம் எனது அரசியலுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்று நான் நம்பினால், நான் பெரும்பான்மை அல்லது சிறுபான்மை அரசியல் கட்சியில் இருக்க வேண்டும். நான் நேருவியன் மீது நம்பிக்கை கொண்டதால் காங்கிரசில் இருக்கிறேன். மதம் என்பது ஒரு தனிப்பட்ட விண்வெளி செயல்பாடு என்பது சிறந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரவர் மதத்தை பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை உண்டு. பொதுக்களத்தில் சர்ச் மற்றும் ஸ்டேட் என்று கடுமையாக பிரிக்கப்பட வேண்டும். நான் ஒரு இந்து, நான் என் கடவுளை வணங்குகிறேன் ஆனால் அது என்னுடைய அரசியல் அல்ல என்று பதிவு செய்து இருந்தார்.