இந்தியாவில் உள்ள 80 சதவீத இந்துக்களை மட்டுமே பா.ஜ.க. இந்தியர்களாக கருதுகிறது.. மணி சங்கர் ஐயர் சர்ச்சை பேச்சு

 
மணி சங்கர் ஐயர்

இந்தியாவில் உள்ள 80 சதவீத இந்துக்களை மட்டுமே பா.ஜ.க. இந்தியர்களாக கருதுகிறது என்று மணி சங்கர் ஐயர் பேசியிருப்பது தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் தற்போது இந்து மற்றும் இந்துத்துவா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்ளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் அண்மையில் எழுதிய சன்ரைஸ் ஓவர் அயோத்தி, நேஷன்ஹூட் இன் அவர் டைம்ஸ் என்ற புத்தகத்தில், இந்து சமயத்தை பயங்கரவாதத்துடன் இழிவுபடுத்தி மற்றும் ஒப்பிட்டு பேசியதாக கூறப்பட்டதை தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. 

சிங்கம் சிங்கிளாதான் வரும்.. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி.. சல்மான் குர்ஷித் தகவல்
இதனையடுத்து, ஐ.எஸ்.ஐ.எஸ்.  மற்றும்  இந்துத்துவாவையும் ஒன்று என்று சொல்லவில்லை, ஆனால் ஒரே மாதிரியானவை என்று சல்மான் குர்ஷித் புது விளக்கம் கொடுத்துள்ளார். இதற்கிடையே அண்மையில் ராகுல் காந்தி, இந்து மதம் மற்றும் இந்துத்துவா இரண்டு வேறுபட்டவை.  இந்து சமயம் என்பது ஒரு சீக்கியரையோ அல்லது முஸ்லிம்மையோ அடிக்க சொல்கிறதா? இல்லைவே இல்லை. ஆனால் இதை செய்வது செய்வது நிச்சயம் இந்துத்துவா என்று தெரிவித்தார். 

ராகுல் காந்தி
ராகுல் காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணி சங்கர் ஐயர் தற்போது இந்துத்துவா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.  மணி சங்கர் ஐயர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தியாவில் உள்ள 80 சதவீத இந்துக்களை மட்டுமே பா.ஜ.க. இந்தியர்களாக கருதுகிறது என்று தெரிவித்தார். தற்போது இது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.