மஹூவா மதுபானம் தயாரித்தால், அது சட்டவிரோதம் கிடையாது... மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு அறிவிப்பு

 
மஹூவா மதுபானம்

மத்திய பிரதேசத்தில் மஹூவா (இலுப்பை) மதுபானத்தை தயாரித்தால், அது சட்டவிரோதம் கிடையாது என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். அதேசமயம் காங்கிரஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம் மாண்ட்லாவில் பழங்குடியினர் பெருமை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில் கூறியதாவது:  அரசாங்கம் ஒரு கலால் கொள்கையை வகுத்து வருகிறது. இதன்கீழ், யாராவது பாரம்பரிய முறையில் மஹூவா (இலுப்பை) மதுபானத்தை தயாரித்தால், அது சட்டவிரோதம் கிடையாது.

சிவ்ராஜ் சிங் சவுகான்

மஹூவா மதுபானங்களில் மதுபானக் கடைகளில் பாரம்பரிய மதுபானம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும். இதனால் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.கே. மிஸ்ரா இது தொடர்பாக கூறியதாவது: 

காங்கிரஸ்

இது பா.ஜ.க.வின் தார்மீக வீழ்ச்சி. கச்சி ஷரப்பை  (கச்சா ஆல்கஹால்) அரசு சட்டப்பூர்வமாகக்கப்ப போவது துரதிர்ஷ்டவசமானது. கள்ள சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கச்சி ஷரப்பை சட்டப்பூர்வமாக்கும் முடிவை அரசு எடுத்திருப்பது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.